அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் ரணக்களம்.. ஊடே மகளிர் அணியினர் செய்யும் அலப்பறை பாருங்கள்! வீடியோ
சென்னை: அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆண் தொண்டர்கள் ரத்தம் சொட்ட சொட்ட சண்டையிடும் நிலையில் மகளிர் அணியினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த மோதல் முற்றினால் அதிமுக இரண்டாக உடையும் சூழல் நிலவி வருகிறது.
இதை சாக்காக வைத்து கொண்டு ஒரு பக்கம் சசிகலா அதிமுகவை கைப்பற்ற தேவையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக பொதுக் குழு கூட்டம்
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து 3 முறை அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த மூன்று முறையும் கூட்டத்தின் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. முதல் முறை குழப்பம் ஏற்பட்டது. இரண்டாவது முறை ஜெயக்குமார் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மூன்றாவது முறை
மூன்றாவது முறை இன்று நடந்த கூட்டத்தின் போது ஜெயக்குமார் ஆதரவாளர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற பெயரில் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அதிமுக நிர்வாகி மாரிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி ஆதரவு
இது ஒரு புறம் இருக்க எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி தங்கள் தலைவர்கள் வாழ்க வாழ்க என கோஷமிட்டு வருகிறார்கள். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கும் போது மகளிர் அணியினரும் தங்கள் தலைவர்களுக்காக வருகை தந்துள்ளார்கள்.

ஆக்ரோஷம்
அவர்களும் தங்களது தலைவரின் பெயரை சொல்லி வாழ்க கோஷமிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஒரு தரப்பு பெண்கள் ஒரு தலைவரை வாழ்க என சொல்ல, அதற்கு மறு தரப்பு பெண்கள் டவுன் டவுன் டவுன் என சொல்லி வருகிறார்கள். முதலில் கத்தி ஆக்ரோஷமாக சண்டையிடும் இவர்கள் சில நிமிடங்களில் சிரித்துக் கொண்டே சண்டையிடுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆண்கள் ரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்களே என கட்சியினர் முணுமுணுக்கிறார்கள்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications