பாமக எம்.எல்.ஏ அருள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக எம்.எல்.ஏ அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அருள் தொடர்ந்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி பாமக எம்எல்ஏ அருள் தொலைபேசி எண்ணுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுவதும், ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்ந்து வருகிறது.

pmk anbumani ramadoss arul salem

கடந்த 4 ஆம் தேதி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக நிர்வாகி ஒருவரின் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மேலும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்கள் உடன் சென்றிருந்த ஐந்து கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பாமக எம்.எல்.ஏ அருள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சதாசிவம், மயிலம் சிவக்குமார் உள்ளிட்ட போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அருள் தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளரான பாமக வழக்கறிஞர் பாலு கொடுத்த புகாரில், இந்த சம்பவத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், எங்கள் தரப்பைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அருள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வன்முறையை தூண்டி வருகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த பாலு, "பாமகவை சேர்ந்த ராஜேஷ் என்ற மாற்றுத்திறனாளியை அருள் தரப்பினர் தாக்கியதில் தான் பிரச்சனை தொடங்கியது. இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்காமல் காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அருள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வன்முறையை தூண்டும்படி எழுதி வருகிறார், பேசியும் வருகிறார்,

அருள் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் தனது ஆதரவாளர்களை சிகிச்சை பெறுவது போல் அனுமதித்து ஜி.கே மணியும் அவரது மகன் தமிழ்குமரனும் செல்லும்போது தங்கள் தரப்பினர் பாதிக்கப்பட்டது போல் அருள் காட்டுகிறார். அருள் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல்துறை விருப்பம், ஆனால் அருள் அதற்கு தகுதியானவரா என பார்க்க வேண்டும். அருள் தனக்கு கொடுத்திருக்கும் காவல்துறை பாதுகாப்பை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.

கும்பகோணத்திற்கு செல்லும் போது தனது சமூக வலைதள பக்கத்தில் "வாங்க கணக்கு தீர்த்துக் கொள்ளலாம்" என பதிவிட்டுவிட்டு அருள் செல்கிறார். இப்படிதான் தொடர்ந்து அவர் வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார். காவல்துறை இதில் நியாயமாக செயல்படவில்லை. எங்கள் தரப்பில் கைது செய்தால் அவர்களையும் கைது செய்யுங்கள், எங்கள் தரப்பில் குண்டாஸ் போட்டால் அவர்கள் தரப்பிலும் குண்டாஸ் போடுங்கள்.

இருதரப்பு மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் விசாரணையில் பிரச்சனைக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரத்தில் பாமகவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியை அருள் ஆதரவாளர்கள் தாக்கியது குறித்து மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் ஆணையமும் காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. இத்தோடு விடப்போவதில்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+