எதுக்கு வீடியோ எடுக்கிற? எனக்கு பொண்ணு தரப்போறியா?.. போலீஸாரிடம் அநாகரீகமாக எகிறிய வக்கீல்கள்
போலீசாரை 2 வக்கீல்கள் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: "எனக்கு பொண்ணா தரப்போற? எதுக்கு வீடியோ எடுக்கிறே... முதல்ல போனை வை.. செல்போனை உடைச்சிடுவேன்" என்று போலீசுக்கே மிரட்டல் விடுத்துள்ளனர் வக்கீல்கள் 2 பேர்!
சென்னை எழும்பூர் கோர்ட்டிற்கு கைதிகளை போலீசார் இன்று அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கைதிகளிடம் வழக்கறிஞர்கள் 2 பேர் வழிமறித்து பேசினர். அப்போது போலீசார் நிறைய பேர் உடனிருந்தனர்.
பொதுவாக கோர்ட்டுக்கு கைதிகளை போலீசார் கூட்டி வந்தால் யாரிடமும் பேச அனுமதிக்க கூடாது என்பது விதி.

பேச அனுமதி இல்லை
ஏனெனில் கைதிகளிடம் யாரையேனும் பேச அனுமதித்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம், அல்லது வழக்கு விசாரணைக்கு இடையூறுகள் ஏற்பட்டு விடும் என்பதால், குற்றவாளிகளை யாருடனும் பேச அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தவிதி தெரிந்தும் வக்கீல்கள் கைதிகளிடம் பேசினர்.

தொட்டு பேசாதீங்க
இந்த காட்சியை போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். பின்னர் கைதிகளை தொட்டு தொட்டு பேசியதை பார்த்த மற்ற பாதுகாப்பு போலீசார் வக்கீல்களிடம், "பேசுங்கள்... வேண்டாம்னு சொல்லலை. ஆனால் தொட்டு பேசாதீங்க" என்றனர். இதை கேட்டதும், அந்த வக்கீல்களுக்கு கோபம் வந்துவிட்டது.

எதுக்கு வீடியோ எடுக்கிற?
உடனே போலீசை பார்த்து, "நான் யார் தெரியுமா.? எப்படி எங்களை பார்த்து மேல கை வைக்க வேணாம்னு சொல்லுவீங்க? என்று அநாகரீகமாக பேச ஆரம்பித்துவிட்டார். பிறகு வீடியோ எடுத்து கொண்டிருப்பதை கவனித்துவிட்ட வக்கீல், "எதுக்கு வீடியோ எடுக்கிற? எனக்கு பொண்ணு தரப்போறியா?

பொண்ணு தரப்போறியா?
முதல்ல போனை வை.. டா.. செல்போனை உடைச்சிடுவேன்... பொண்ணாடா தரப்போறே? வீடியோ எடுத்து யாருக்கு அனுப்புவே... உன்னால் எங்களை ஒன்னும் செய்ய முடியாது. உங்க டிஜிபியை இப்பவே நான் இங்க வர வைக்கிறேன் பாக்கிறியா? என்று விரலை நீட்டி மிரட்டுகிறார் அந்த கருப்பு அங்கி அணிந்த வக்கீல்.

இது நியாயமா?
சட்ட விதிகளை கடைப்பிடித்த போலீசாரை, சட்டம் படித்த வக்கீல்களே அதை மீறியதுடன், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுவது எந்தவிதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications