படைப்பாற்றலும்.. புதுமையும் சந்தித்துக்கொள்ளும் ஆட் வேர்ல்ட் ஷோடவுன் 2023 நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட் வேர்ல்ட் ஷோடவுன் 2023ம் (adworld showdown 2023) ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இது மார்கெட்டிங் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இங்கு படைப்பாற்றலும், புதுமையும் ஒன்றிணைகிறது. இது வெறும் சந்தைபடுத்துதல் தொடர்பான நிகழ்வு மட்டுமல்ல. தொழில்துறையின் வெற்றியாளர்கள் சந்தித்துக்கொள்ளும் முக்கிய கூட்டமும் ஆகும்.

இந்த நிகழ்வு சந்தைப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கான சந்திப்பு இடமாக செயல்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் தங்கள் துறையின் வெற்றியாளர்களிடமிருந்து புதிய யுக்திகளை கற்றுக்கொள்வார்கள். பிராண்டிங், கிரியேட்டிவ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் விளம்பர செயல்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விருதுகளும் வழங்கப்படுகின்றன. சிறப்பான பிராண்டுகளை உருவாக்கியவர்கள், பிராண்ட் வடிவமைப்பில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள், சந்தைபடுத்துதலில் புதிய யுக்திகளை உருவாக்கியவர்களை இந்த நிகழ்ச்சி கவுரவிக்கிறது.

 Adworld Showdown 2023, one of the most anticipated events in the world of marketing, has begun

மட்டுமல்லாது இந்த நிகழ்ச்சி உங்கள் மார்க்கெட்டிங் பயணத்தையே மாற்றும் திறன் கொண்டதாகும். சந்தைபடுத்துதலை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்ளப்படும். மார்மகெட்டிங்க் உலகம் முற்றிலும் புதியதானது. அங்கு வீரியமானது மட்டுமே நிலைத்திருக்கும். எனவே இது குறித்து சிந்திப்பவர்கள் இந்த பிரத்யேக நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இளம் தலைமுறையினர் இதில் பங்கேற்பது அவர்களுக்கு புதிய உற்சாகத்தையும், வாய்ப்புகளையும் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

குளோபல் டிரெண்ட்ஸ் ஃபோரம், இந்தியா கிரேட்டிவ் இண்டஸ்டிரீஸ் கவுன்சில், ஜோஷ் ஆப், கென்சியோ, ஃபார் பிரஸ் ரிலீஸ் டாட் காம். ED டைம்ஸ், தி பிரிவலென்ட் இந்தியா மற்றும் 24 ஃப்ரேம்ஸ் டிஜிட்டல் ஆகியவை (Global Trends Forum, India Creative Industries Council, Josh App, One India, Kenscio, ForPressRelease.com, ED Times, The Prevalent India & 24 Frames Digital) இந்த நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+