சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி வெட்டி கொலை! துணை கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சாஸ்திரி நகர் ஜே5 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோகிணி, அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

TVK Kannan murder

சென்னை அடையாறு அருகே வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் தவெக நிர்வாகி. நேற்று இரவு அந்த பகுதியில் மர்மகும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய 5 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து வைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை முன் விரோதத்தால் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு சிவா என்பதை கொலை செய்த சம்பவத்திற்கு பழித்தீர்க்கவே கண்ணன் தற்போது படுகொலை செய்யப்பட்டாராம். தலைநகரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆணவக் கொலை, லாக்கப் டெத் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி , கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கெல்லம் பதில் வேண்டும் என முதல்வரிடம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தலைநகரில் நடந்த சம்பவம் குறித்து உதயநிதி தனது ட்விட்டரில், "நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.

அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் 'வெற்றி சட்டம்-ஒழுங்கு' நிலை!

தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?

இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?

இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சென்னை அடையாறில் கொலையை தடுக்க தவறியதாக சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் ரோகிணி, அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+