ஒரே கஞ்சா நாத்தம்! மாஜி டிஜிபி மகன் வீட்டில் பலான தொழில்! எல்லாமே ஆப்பிரிக்காவாம்.. அதென்ன லோகாண்டோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஓய்வு பெற்ற டிஜிபியின் மகன் வீட்டில் பாலியல் தொழில் செய்த வந்த கென்யா, தான்சான்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 9 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கஞ்சா மற்றும் மது விருந்து நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், அங்கு பாலியல் தொழில் செய்ய உடந்தையாக இருந்ததாக இலங்கை பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர சோதனை நடத்தி மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் பாலியல் தொழில் நடத்தி வரும் விடுதிகளுக்கு சீல் வைத்த வருகின்றனர். இதை எடுத்து பாலியல் தொழில் நடத்தும் கும்பல் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வீடுகளை வாடகைக்கு பிடித்து அங்கு மது விருந்து, கஞ்சா விருந்துடன் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

chennai crime police

இந்த நிலையில் தான் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த கும்பலை போல போலீசார் கைது செய்திருக்கின்றனர். கோயம்பேடு அருகே பாரதி அவன்யூ பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்கு ஓய்வு பெற்ற டிஜிபி ராமச்சந்திரன் என்பவரது மகன் பாலாஜி வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். தற்போது பாலாஜி துபாயில் குடும்பத்துடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலாஜி அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அந்த வீட்டுக்கு பலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றிருக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் கஞ்சா புகை வெளிவந்ததோடு, இரவில் சத்தமாக ஆடல் பாடல் என அட்டகாசம் செய்திருக்கின்றனர்.

இதை அடுத்து அப்பகுதி மக்கள் கோயம்பேடு ஆய்வாளர் அருள் மணிமாறனிடம் புகார் அளித்தனர். இதை அடுத்து அந்த வீட்டுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர் போலீசார். வீட்டுக்குள் சென்றபோது வீடு முழுவதும் கஞ்சா புகையோடு, மது, ஹுக்கா பார் மற்றும் அரைகுறை ஆடைகளுடன் வெளிநாட்டு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். மேலும் அந்த வீட்டுக்குள் கிண்டி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் இளம் பெண்களுடன் பாலியல் தொடர்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதை அடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களுக்கு உடையை அணிவித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கென்யா, நைஜீரியா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 9 பெண்கள், மூன்று இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் 23 செல்போன்கள். ஒரு ஐபேட், கஞ்சா, 31,000 பணம், 15 ஹூக்கா குடுவைகள், ஆணுறைகள்,பைக், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கென்யாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கை பெண் மூலம் டிஜிபி ராமச்சந்திரனின் மகன் பாலாஜியின் வீட்டை வாடகைக்கு எடுத்து தனது தோழிகளை வைத்து லோகாண்டோ ஆப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், காவல்துறை அதிகாரியின் வீடு என்பதால் போலீசார் யாரும் வர மாட்டார்கள் என திட்டமிட்டு இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த நிர்மலா என்பவர் தான் அவர்களுக்கு உதவியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் நிர்மலாவிடம் நடத்திய விசாரணையில் பாலாஜியின் நண்பர் அருள் என்பவர் மூலம் வீட்டை 2010 ஆம் ஆண்டு முதல் மாதம் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்ததும், அதில் பூஜா கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயரில் வெளிநாட்டுப் பெண்களுக்கு வாடகைக்கு விட்டு ஒரு லட்சம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்பது தெரிந்தே நிர்மலா அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

தொடர்ந்து கென்யாவைச் சேர்ந்த நான்கு பெண்கள், தான்சானியாவை சேர்ந்த 4 பெண்கள், ஒரு நைஜீரியாவை சேர்ந்த பெண் என மொத்தம் ஒன்பது பேரும் விபச்சார தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். இதை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் வெளிநாட்டு பெண்களிடம் தொடர்பிலிருந்து வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்த கிருஷ்ணா, முகமது, சாஜித் ஆகியோரிடம் கொடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இலங்கை பெண் நிர்மலாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+