"தங்கத்தை இனி பிடிப்பதே கஷ்டம் தான்!" இன்னும் எவ்வளவு டைம் இருக்கு! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்
சென்னை: தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போதைய சூழலில் தங்கத்தை வாங்கலாமா.. இல்லை காத்திருக்கலாமா? என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதலீட்டுக் கருவியாக எப்போதும் தங்கமே இருக்கிறது. தங்கம் விலை நீண்ட கால நோக்கில் குறையாது. தங்கத்தை எளிதாகப் பணமாக மாற்ற முடியும் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தங்கம் விலை நேற்றைய தினம் அதிகரித்திருந்தது. நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 25 விலை உயர்ந்து 5615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ.200 விலை உயர்ந்து ரூ. 44,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்: கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை இப்படி தான் இருக்கிறது. பெரியளவில் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் தங்கம் விலை வர்த்தகமாகி வருகிறது. கிட்டத்தட்ட ரூ. 5500 முதல் 5700 என்ற ரேஞ்சிலேயே தங்கம் விலை இருக்கிறது. இதனால் பலரும் ஆர்வமாகத் தங்கம் வாங்குகிறார்கள். இருப்பினும், தற்போது தங்கம் வாங்குவது சரியாக இருக்குமா.. இல்லை இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமா என்ற கேள்வி இன்னுமே சிலரது மனதில் இருக்கவே செய்கிறது.
இது தொடர்பாக இப்போது ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் தனது வீடியோவில், "தங்கம் விலை இப்போது பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சில நிறுவனங்கள் தங்க நகைகளுக்கு ஆஃபர்ளை அறிவித்திருந்தார்கள். அதில் உங்களுக்கு வேண்டும் என்றால் தங்க நகையாக வாங்கலாம். இல்லை காயினாக வேண்டும் என்றால் காயினாக கூட வாங்கலாம். இல்லையென்றால் கோல்ட் பீஸ் ஆக தங்கத்தை வாங்கலாம்.
எவ்வளவு டைம் இருக்கு: அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கத்தை வாங்கச் சரியான வாய்ப்பு இருக்கிறது. இந்த 18 மாதங்களைப் போல மீண்டும் தங்கம் வாங்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. அதன் பிறகு தங்கம் விலையைப் பிடிக்க முடியாது. எனவே, இந்த காலகட்டத்தில் முடிந்த வரை தங்கத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
இன்னும் தங்கம் குறையக் குறையக் கூடுதலாகத் தங்கத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மில்லிகிராம் முதல் தங்கத்தை வாங்கலாம் என்பதால் மெல்ல மெல்லத் தங்கத்தை வாங்குங்கள். அதன் பிறகு தங்கம் விலை ரூ.7000 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது." என்றார்.
அதெப்படி முடியும்: ஆனந்த் சீனிவாசன் ஒரு மில்லிகிராம் அளவில் கூட தங்கத்தை வாங்கலாம் எனக் குறிப்பிடுகிறார். அதெப்படி ஒரு மில்லிகிராம் தங்கத்தை வாங்க முடியும் என்கிறீர்களா.. பங்குச்சந்தையில் கோல்ட் இடிஎப் என்று ஒன்று இருக்கிறது. தங்கம் விலை ஏறினால் இதுவும் ஏறும். தங்கம் விலை குறைந்தால் இதுவும் குறையும். இதில் சுமார் 51 ரூபாய் இருந்தால் கூட போதும், இதில் நாம் தங்கத்தை வாங்கலாம். இதைத்தான் ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் குறிப்பிடுகிறார்.
இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications