Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1996ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் முதல் முறை.. அறுதிப் பெரும்பான்மை பெறும் திமுக! அசத்திட்டாரே ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக திமுக தனித்து பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடித்து சாதித்துள்ளது.

1991 முதல் 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். வளர்ப்பு மகன் திருமணம், சசிகலாவுடன் சேர்ந்து கும்பமேளாவில் ஆடம்பர குளியல், சொத்து குவிப்பு, ரவுடிகள் அராஜகம் என பல காரணங்கள் இந்த பின்னணியில் இருந்தன.

இந்த நிலையில்தான், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அப்போது சினிமாவில் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் இந்த கூட்டணிக்கு பகிரங்க ஆதரவு அளித்தார்.

ரஜினி வாய்ஸ்

ரஜினி வாய்ஸ்

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என ரஜினி கொடுத்த வாய்ஸ் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசும், மதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதாதளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன. பாமக, திவாரி காங்கிரஸ் ஆகியன தனி அணியாக போட்டியிட்டன.

கூட்டணி கணக்கு

கூட்டணி கணக்கு

இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் தமாகாவுக்கு 40 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் 11 இடங்களிலும் போட்டியிட்டன. திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக 168 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 64 இடங்களிலும் போட்டியிட்டன.. மதிமுக 177 இடங்களிலும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் 40 இடங்களிலும், ஜனதாதளம் 16 இடங்களிலும் போட்டியிட்டன. பாமக 116 இடங்களில் போட்டியிட்டது.

தோற்றுப்போன ஜெயலலிதா

தோற்றுப்போன ஜெயலலிதா

திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டனர். பர்கூர் தொகுதியில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, விளாத்திகுளத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் களம் கண்டனர். இத்தேர்தலில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவர், போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார். அதேபோல் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் தோல்வியடைந்தனர். அதிமுகவில் திருநாவுக்கரசு, ராசிபுரம் சுந்தரம், சங்கரன்கோவில் கருப்புசாமி, வில்லிபுத்தூரில் தாமரைக்கனி ஆகியோர் மட்டும் வெற்றி கண்டனர். காங்கிரசில் ஒருவர் கூட வெற்றி பெறாமல் தோற்றனர்.

திமுக அறுதிப் பெரும்பான்மை வெற்றி

திமுக அறுதிப் பெரும்பான்மை வெற்றி

இத்தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான தமாகா 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாமக 4 தொகுதிகளை வென்றது. மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட மதிமுக பூஜ்யம்தான் பெற்றது. இந்த தேர்தல்தான் திமுக கடைசியாக தனித்து பெரும்பான்மை பெற்ற தேர்தலாகும்.

அடுத்தடுத்த தேர்தல்கள்

அடுத்தடுத்த தேர்தல்கள்

ஆம்.. 2001 சட்டசபை தேர்தலில் திமுக 31 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. 2006 சட்டசபை தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் 132 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 96 தொகுதிகளில்தான் வென்றது. கூட்டணியிலிருந்த காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34 தொகுதிகளை வென்றது. பாட்டாளி மக்கள் கட்சி 31 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 10 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வென்றது. எனவே இது கூட்டணி ஆட்சியாகத்தான் அமைந்தது. எனவே, "சிறுபான்மை திமுக அரசு" என்றுதான், 5 ஆண்டுகளும் இந்த அரசை ஜெயலலிதா குறிப்பிட்டு பேசுவார், அறிக்கை வெளியிடுவார்.

திமுக தோல்வி

திமுக தோல்வி

இலங்கை பிரச்சினை உச்சம் தொட்டிருந்த நிலையில், 2011 சட்டசபை தேர்தலில், திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளைத்தான் வெல்ல முடிந்தது. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டு 134 தொகுதிகளை வென்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளைத்தான் வென்றது.

சாதித்த ஸ்டாலின்

சாதித்த ஸ்டாலின்

இந்த நிலையில்தான் கருணாநிதி மறைந்த பிறகு திமுக சந்தித்த முதல் சட்டசபை பொதுத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலை உருவாகியுள்ளது. ஆம்.. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 150 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்றிருந்தது. இதில் 118 தொகுதிகளில் திமுக தனித்து முன்னிலை பெற்றிருந்தது. 234 தொகுதிகளில் பாதிக்கு மேல் திமுக பெற்றுவிடும் வாய்ப்பு இருப்பதால், 1996க்கு பிறகு முதல் முறையாக திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+