இது பெரிய ஆபத்துங்க! நீல நிறத்தில்.. விளக்கு போல மின்னிய சென்னை கடல் அலைகள்.. ஷாக்கிங் சம்பவம்
சென்னை; சென்னையில் உள்ள பிரபல பீச் ஒன்றில் பயோலுமினிசென்ஸ் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடல் அலைகள் வண்ணமாக மாறின.
பொதுவாக உலகம் முழுக்க இயற்கையாக ஒரு பொருள் மிளிர்ந்தால் அதை பயோலுமினிசென்ஸ் என்பார்கள். காடுகளில் சில விலங்குகள் இப்படி மிளிரும். நிறைய செடிகள் இப்படி மிளிரும். சில தவளைகள் கூட இப்படி வெளிச்சம் எழுப்பும்.

என்ன வெளிச்சம்?: ஒன்று தங்கள் உணவுகளை கவர்ந்து அதை இரையாக்குவதற்காக இப்படி செய்யும். இல்லையென்றால் .. தங்கள் எதிரிகளை கவர்ந்து அதை தாக்குவதற்காக இப்படி செய்யும். இல்லையென்றால் தாங்கள் இணை சேருவதற்காக இப்படி செய்யும். அதனால்தான் வெளிச்சத்தை, அழகை பார்த்து ஏமாற கூடாது.. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன.
அந்த வகையில்தான் கடலிலும் கூர் இப்படி பயோலுமினிசென்ஸ் ஏற்படுவது உண்டு. இது கடல் அலைகள் திடீரென வெளிச்சமாக மாறும். கடலுக்கு உள்ளே இருந்து யாரோ டார்ச் அடிப்பது போல வெளிச்சம் ஏற்படும். சில இடங்களில் நீல நிறத்தில் தண்ணீர் வெளிச்சமாக மின்னும். சில இடங்களில் சிவப்பு நிறத்தில் மின்னும்.
எப்படி ஏற்படும்?: பயோலுமினிசென்ஸ் முழுக்க முழுக்க கெமிக்கல் விளைவு ஆகும். அந்த வகையில் சென்னையில் பயோலுமினிசென்ஸ் பாலவாக்கம் கடற்கரையில் காணப்பட்டது. சில மீன்கள், ஸ்க்விட்கள் மற்றும் பாசிகள், வேட்டையாடுபவர்களை குழப்பி, இரையை ஈர்ப்பதற்காக இப்படி வெளிச்சத்தை உருவாக்கும். சில இடங்களில் பாலுறவுக்கு துணையை ஈர்க்கும் முறையிலும் இப்படி செய்யும். இதன் மூலம் இயற்கையான இரசாயன வெளிப்பட்டு அதனால் அவை, கடலைப் பிரகாசிக்கச் செய்கிறது. மிகவும் கவர்ச்சிகரமாக, பார்க்கவே ரம்மியமாக இருக்கும் இது.

அதே போல கடந்த 2019ல் கூட சென்னையில் பல பீச்களில் இப்படி ஏற்பட்டது. சமயங்களில்.. கடலில் உள்ள சில வகை நச்சுத்தன்மை கொண்ட பாசிகள், தங்களை உண்ண வரும் சிறிய மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உமிழும் கெமிக்கல் கூட இந்த வெளிச்சத்தை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க நச்சுத்தன்மை வாய்ந்தது. அதிக ஆபத்தானது ஆகும்.
இந்த வெளிச்சம் காரணமாக பெரிய மீன்கள் அந்த பகுதிக்கு வந்து.. அங்கே உள்ள சின்ன மீன்களை கொன்று விடும். இதனால் பாசிகள் தப்பிக்கும். பாசிகள் இப்படி தங்களை தாங்களே காத்துக்கொள்ள வெளியிடும் இந்த ஒளி நச்சுத்தன்மை வாய்ந்தது. கெட்ட கெமிக்கல் இது. இதனால் இளம் மீன்கள் சாகும். மீன் சுழற்சி பாதிக்கப்படும். கடலும் மாசுபடும். மனிதர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும் மீன் வளர்ச்சியில் இது பாதிப்பை,. நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.
Bioluminiscence in #Chennai ! Spotted at Palavakkam beach. The natural chemical process that some fish, squid & algae undergo so to either confuse predators, attract prey or even lure potential mates, is what makes the ocean sparkle. So fascinating 🌊 pic.twitter.com/rTHt95uEhL
— Smitha T K (@smitha_tk) October 10, 2023
சென்னை கடல்: உணவு சுழற்சியை இந்த வெளிச்சம் பாதிக்கும். இவை அதிக அளவு அம்மோனியாவையும் வெளியேற்றுகின்றன, இதனால் பெரிய அளவில் மீன்கள் செத்து குவியும் வாய்ப்பு உள்ளது. இந்த பாசி திட்டுகள் கடலோர மாசுபாடு மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் காரணமாக ஏற்படுவதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால் கடல் சுழற்சி.. கடல் நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமடைதல், இதுபோன்ற பாசிக்கள் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications