பழைய மாடல் ஃபியட் கார் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! கூட போனது யாருன்னு பாருங்க! ஓல்டு ஈஸ் கோல்டு!
சென்னை: விடுமுறை தினமான இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை சாலைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பழைய மாடல் ஃபியட் காரை ஆசையாக ஓட்டிச் சென்று அந்தக்கால நினைவலைகளில் மூழ்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை பொதுவாகவே பயணப் பிரியர். கருணாநிதியை போலவே கார் மூலம் சாலை மார்க்கமாக பயணிக்கவே அதிகம் விரும்பக் கூடியவர். திமுக இளைஞரணிக்கு ஆரம்பக் காலங்களில் கட்டமைப்பை நிறுவுகின்ற பணியை ஏற்றுச் செய்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும் காரிலேயே வலம் வந்தார். அவ்வாறு சென்ற போதெல்லாம் ஓட்டுநரை ஓரமாக உட்கார வைத்துவிட்டு அவரே காரை ஓட்டிச் செல்வார்.

அதேபோல் திருமணமான புதிதில் தனது மனைவி துர்கா ஸ்டாலினை அமர வைத்து தாமே கார் ஓட்டிச் செல்வார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த தகவலை பிரபல பெண்கள் இதழுக்கு எழுதிய தொடரின் மூலம் துர்கா ஸ்டாலினே உறுதி செய்துள்ளார். மொத்தத்தில் கார் ஓட்டுவது என்றால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும். இதனிடையே அரசியலில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கிய பிறகு முன்பு போல் முதலமைச்சர் ஸ்டாலினால் டிரைவிங் செய்ய முடியவில்லை.
முதலமைச்சரின் கான்வாய் எந்தளவுக்கு மின்னல் வேகத்தில் பறக்கும் என உங்களுக்கு தெரியும். அதனால் கார் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனது மனதுக்கு பிடித்தமான பழைய மாடல் ஃபியட் காரை இன்று சென்னை சாலைகளில் ஓட்டிச் சென்றார். பழைய காராக இருந்தாலும் குறை சொல்ல முடியாதபடி வேகமாகவே அந்த கார் சென்றது.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன், மற்றும் மருத்துவர் ஆகியோர் ஸ்டாலினுடன் அந்த சின்னஞ்சிறிய காரில் பயணித்தனர். கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல், தொண்டை வலியால் ஏற்பட்ட உடல் சோர்வால் வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்த அவர் இன்று ரிலாக்ஸாக நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தான் இந்த காரை ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் கார் ஓட்டும் வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications