ஆயிரத்துக்குள் வந்த தினசரி கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கையும் சரிந்தது.. மீண்டு வரும் தமிழகம்
சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,44,929 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று ஆயிரத்துக்குள் வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,44,929 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும்3,172 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 33,91,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,980 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் உயிரிழப்பு
கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும், அரசு மருத்துவமனைகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,48,811 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக கோவையில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சோதனை
இதுவரை 6,38,90,901 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 80,755 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,938 கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 20,10,691 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 561 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு
பெண்களில் இதுவரை மொத்தம் 14,34,200 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 388 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications