ஸ்டாலின் சென்னைக்கு வந்ததுமே.. நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. வீடியோ காலில் டீசர்.. ரெடியான உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக ஒருங்கிணைப்புக் குழுவினருடன் வீடியோ கால் வாயிலாக ஆலோசனை நடத்தினார். கட்சிப் பணிகள் பற்றியும், அரசு தொடர்பாகவும் அமைச்சர்களிடம் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதோடு, அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாகவும் பேசியுள்ளார் ஸ்டாலின். அப்போது உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினிடம் முக்கியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருந்தபடியே கட்சியையும், ஆட்சியையும் கவனித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கூகுள், மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சென்று அதன் தலைவர்களை சந்தித்தார். மேலும் அந்த நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

After CM Stalin s return coordination committee will make recommendations on changes to be made in DMK

அமெரிக்காவில் ஸ்டாலின்: தொடர்ந்து சிகாகோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அஷ்யூரன்ட், ஈட்டன், ட்ரியல்லியன்ட், ஆட்டம், ஒமியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். தொடர்ந்து சிகாகோவில் உள்ள தமிழர்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடி அரசுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இருந்தப்படியே அரசு கோப்புகளில் கையெழுத்திடும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனத் தெரிவித்தார்.

திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை: இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, முப்பெரும் விழா ஏற்பாடுகள், திமுக பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

பவள விழா ஏற்பாடுகள்: அத்துடன், "பவளவிழாவையொட்டி திமுகவினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொடிகளைப் பறக்கவிட வேண்டும்" என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு மேற்கொண்டு வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும், கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அளித்த வரவேற்பு பற்றியும் உற்சாகமாகத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சிகாகோவில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் மகிழ்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

After CM Stalin s return coordination committee will make recommendations on changes to be made in DMK

திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்: அப்போது காணொளிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும்" என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழா ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்." எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வந்ததுமே: ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாறுதல்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து சில பரிந்துரைகளை தயார் செய்துள்ளனர்.

இன்று அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் மேலோட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்னும் 3 நாட்களில் சென்னை திரும்பும் நிலையில், அதன்பிறகு ஒருங்கிணைப்புக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினிடம், திமுகவில் நிர்வாக ரீதியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை தெரிவிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து, அதிரடி முடிவுகளை ஸ்டாலின் கையில் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+