நேற்று அதிமுக, இன்று பாஜக.. திமுகவுக்கு எதிராக வழக்கு போட்ட 2 தரப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்
சென்னை: தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்புக்கும் அடுத்தடுத்த நாட்களில் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரைப் பயன்படுத்தத் தடையில்லை என்ற கூறிய உச்சநீதிமன்றம், வழக்குப் போட்ட அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. தற்போது, 4 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து பாஜக ஆதரவு வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரி அதிமுக எம்பி சிவி சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கூறி இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரைப் பயன்படுத்தத் தடையில்லை என்று கூறியதோடு, இதுபோல் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதேபோல் வழக்கைத் தொடுத்த அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் அதிமுகவுக்கு திமுக பதிலடி கொடுத்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக ஆதரவு வழக்கறிஞரான சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் அரசு செய்தித் தொடர்பாளர்களாக ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் பெ. அமுதா ஆகியோர் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.
அதுமட்டுமல்லாமல் மனுதாரரான வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவே செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினார். அடுத்தடுத்த நாட்களில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்புக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications