கிளம்பிய கடும் எதிர்ப்பு.. சென்னை சென்ட்ரலில் மீண்டும் ஆடியோ அறிவிப்புகள்! பயணிகள் செம ஹேப்பி
சென்னை சென்டிரல் சைலண்ட் ரயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சைலண்ட் ரயில் நிலையமாக மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சைலண்ட் ரயில் நிலையம் அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ள தென்னக ரயில்வே, மீண்டும் ஆடியோ மூலம் ரயில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் பரபரப்பான ரயில் நிலையங்களில் முதன்மையானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். சுமார் 150 ஆண்டுகள் பழமையான சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நீங்கள் எப்போது சென்றாலும் பரபரப்பாகவே இருக்கும்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் சென்ட்ரலில் இருந்து நேரடியாக ரயில்கள் உள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 200 ரயில்கள் இயக்கப்படுவதால் பரபரப்பாகவே சென்ட்ரல் இருக்கும்.

சென்னை சென்ட்ரல்
இதனால் ரயில் குறித்த அறிவிப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்னக ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சென்னை சென்ட்ரல் சைலண்ட் ரயில் நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்த அறிவிப்புகள் எப்போதும் சென்ட்ரலில் தமிழ், ஆங்கிலம், இந்தியில் இருக்கும். இதற்கிடையே சென்னை சென்ட்ரல், சைலண்ட் ரயில் நிலையமாக மாற்றப்பட்டதால், அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

சைலண்ட் ரயில் நிலையம்
நாட்டிலேயே இப்படி சைலண்ட் ரயில் நிலையமாக மாற்றப்பட்ட முதல் ஸ்டேஷன் சென்னை தான் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒலி மாசை தடுக்க இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆடியோ அறிவிப்புகள் இருக்கிறது. சென்னை சென்ட்ரலில் முதல்முறையாகச் சோதனை அடிப்படையில் இந்த சைலண்ட் ரயில் நிலைய திட்டத்தை அறிமுகப்படுத்தினர். பயணிகள் தங்கள் பிளாட்பாரத்தை கண்டறிய ஏதுவாக, ரயிலின் புறப்பாடு மற்றும் வருகை தகவல்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளப் பெரிய பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவிப்பு
எனவே, ரயில்வே நிலையத்தில் இருக்கும் அனைத்து திரைகளும் இயங்கும் நிலையில் இருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் வசதிக்காக உதவி மையங்களில் போதிய ஆட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகள் தகவல்களைக் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்குச் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் கூட பெரும்பாலான பயணிகள் எதிர்ப்பே தெரிவித்தனர்.

போராட்டம்
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் நாளும் சராசரியாக 5.30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். அவசரமாக ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளால் போர்டை எல்லாம் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறப்பட்டது. குறிப்பாகப் பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வழி மேப்கள் வைக்கப்பட்டுள்ள போதிலும், அது பெரியளவில் பயனுள்ளதாக இருக்காது என்றே பலரும் தெரிவித்தனர். மேலும், மீண்டும் ஆடியோ அறிவிப்புகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

மீண்டும் ஆடியோ அறிவிப்பு
இதை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அமைதி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஆடியோ அறிவிப்புகள் இல்லாமல் திரைகளில் மட்டுமே ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்த அறிவிப்பு இருந்தது. இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இப்போது மீண்டும் ஆடியோ மூலம் ரயில் குறித்த அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications