இப்போ கூட்டணி பற்றி அதிமுக பேசவே இல்லையே.. புது கணக்கு சொல்லும் பாஜகவின் எச். ராஜா
சென்னை: அதிமுக கூட்டணி விவகாரத்தில் எங்கள் தலைமை இது பற்றி அறிவிக்கும் வரை கொஞ்சம் அமைதியாக இருப்போம். மத்திய தலைமை தெளிவுபடுத்தும் வரை கூட்டணி குறித்து நான் எதுவும் பேசப்போவது இல்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் அதிமுக இருந்து வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை வெளிப்படையாகவே விமர்சித்து வந்தனர். பதிலுக்கு அண்ணாமலையும் சளைக்காமல் அதிமுகவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாரி வந்தார். இப்படி தொடர்ந்து முட்டல் மோதலில் இருந்து வந்த மோதல் தற்போது கூட்டணி முறிவு மூலமாக முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக - பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது. அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இனி கிடையாது. பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை. 2026 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்தி எம்பி ஆகிவிட முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்த தமிழக பாஜவின் முக்கிய புள்ளிகள் பலருக்கும் இந்த கூட்டணி முறிவு ஏமாற்றம் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன் காரணமாக பாஜகவை சேர்ந்த டாப் தலைவர்கள் சிலர் விரைவில் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சிலர் ஏற்கனவே டெல்லிக்கு பறந்துவிட்டதாகவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உடன் கூட்டணியை எப்படியாவது சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு கிடைக்கும் இடங்கள் ஜீரோ ஆகிவிடும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் தேர்தல் பணிகளை செய்ய முடியும். பாஜக மட்டும் தனியாக தேர்தல் பணிகளை செய்ய முடியாது என பல்வேறு காரணங்களை டெல்லி தலைமையிடம் கொட்டுவதற்கு தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க பாஜக உடனான கூட்டணியை முறித்த பிறகு அக்கட்சியை அதிமுக இதுவரை விமர்சிக்கவே இல்லை. ஊடகங்களிலும் இதுபற்றி பேசவேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என்று ஒதுங்கிக் கொண்டார்.
கூட்டணியில் இருந்த போதே அனல் பறக்க மாறி மாறி விமர்சித்துக் கொண்டவர்கள் கூட்டணியில் இருந்து விலகிய பிற்கு மவுமனமாக இருப்பது அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக இப்போது அதை சொல்கிறதா? என்று பேசியுள்ளார்.
இது குறித்து எச்.ராஜா கூறியிருப்பதாவது:- அதிமு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பேசியதா.. எங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டியவர்கள் தெரிவிப்பார்கள். பாஜகவை பொறுத்தவரை அது ஆல் இந்தியா பார்ட்டி... கிளை கட்சி கிடையாது. அதனால... அன்னைக்கு அறிவித்த அதிமுகவும் இன்னைக்கு திருப்பி பேசவில்லை.
நான் பேசவில்லை என்ற உண்மையை சொல்லியிருக்கேன் அவ்ளோதான்.. அது ஏன்... எதனால... உள் நோக்கம் என்ன... அதற்குள் போக நான் தயாராக இல்லை... எங்கள் தலைமை இது பற்றி அறிவிக்கும் வரை கொஞ்சம் அமைதியாக இருப்போம். மத்திய தலைமை தெளிவுபடுத்தும் வரை கூட்டணி குறித்து நான் எதுவும் பேசப்போவது இல்லை. இவ்வாறு எச் ராஜா பேசினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications