அதிமுக பொதுச்செயலாளரான ஈபிஎஸ்! தேர்தல் ஆணையத்தில் ஆவணம் சமர்பிப்பு.. ஏற்குமா? செக் வைக்கும் ஓபிஎஸ்?
சென்னை: ஒட்டுமொத்த அதிமுகவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அதுகுறித்த ஆவணங்களை அக்கட்சி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம் என கூறப்படுகிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது. மாறாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிமுகவில் பொதுக்குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. விதிகளின் படியே செயல்பாடு உள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு
இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

பொதுச்செயலாளரான எடப்பாடி
அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆவணங்கள் அனுப்பி வைப்பு
இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தெரிவித்துள்ளது.

செக் வைக்கும் ஓபிஎஸ்?
இதனை ஓ பன்னீர் செல்வம் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம் என கூறப்படுகிறது. அதாவது ‛‛அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விஷயங்களை ஏற்க கூடாது'' என கடிதம் எழுதலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications