பதவி பறிபோன அடுத்தநாள்.. திடீரென டெல்லிக்கு பறந்த அண்ணாமலை.. யாரை சந்திக்கப் போகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த பயணத்தின் போது பாஜகவின் மூத்த நிர்வாகிகளையும் அண்ணாமலை சந்தித்து பேசவுள்ளதாகவும், அவருக்கான அடுத்தக் கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.

Annamalai Chennai BJP

அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, தற்போது தேசிய பொதுக்குழு உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அண்ணாமலைக்கு பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகங்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது.

அதனை 2026 சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்யும் வகையில் நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராக கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் அண்ணாமலை மாநில தலைவராக இருந்த போது, நயினார் நாகேந்திரனுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

சில முறை நயினார் நாகேந்திரனை வெளிப்படையாகவே அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நேற்று பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற போது, அண்ணாமலைக்கு செருப்பு வாங்கி கொடுத்து அவரின் சபதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார். இதனால் அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநில தலைவர் பதவியை இழந்த அடுத்த நாளிலேயே அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவரான பிஎல் சந்தோஷை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின் அண்ணாமலையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+