"கோ பேக் மோடி.." பிரதமருக்கு எதிராக கறுப்பு பலூன்களுடன் வீடியோ.. காங். நிர்வாகிக்கு வீட்டு காவல்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னை வரவுள்ள நிலையில், கறுப்பு பலூன்களுடன் வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சனிக்கிழமை தமிழ்நாடு வர உள்ளார். சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அத்துடன் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திராவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதியம் 3 மணியளவில் தமிழ்நாடு வருகிறார். முதலில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.

வந்தே பாரத்: அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுக்க பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் ரோந்து பயணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை பிளாட்பார்ம் டிக்கெட் விற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே வரவும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
போலீஸ் நடவடிக்கை: இதற்கிடையே பிரதமர் மோடி வருகையின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் கறுப்புக்கொடி காட்ட காங். நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே சென்னை காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமார், Go back Modi என்ற பலூனுடன் ரஞ்சன்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஞ்சன்குமார் வைத்திருந்த கோ பேக் மோடி என்ற வாசங்கள் உடனான பலூன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக அக்கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, "அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் பதவியை இழக்கச் செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தைச் சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையைக் கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications