Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருந்தாளிகளுடன் உடலுறவு.. மனைவிகளை விருந்தாக்கும் கணவன்கள்.. யார் இவர்கள்? ஏன் இப்படி செய்கின்றனர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் நம் வீட்டுக்கு வரும் உறவினர்களை வாசல் வரை சென்று வீட்டுக்குள் அழைத்து வந்து நீர் ஆகாரங்கள் அல்லது உணவு கொடுத்து வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் ஹிம்பா பழங்குடியினத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவன்கள் கூறுவதால் விருந்தாளிகளுடன் உடலுறவு வைத்து வரவேற்று வருகின்றனர். அவர்கள் ஏன் இப்படி செய்கின்றனர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

இந்தியா உள்பட உலகில் எந்த இடத்தில் பிறந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கலாசாரம், பண்பாடு ஒன்று உள்ளது. இதனால் தான் மக்களின் உணவு பழக்க வழக்கங்கள், வழிபாடு முறை, பண்டிகை கொண்டாட்டம், விருந்தோம்பல் உள்பட பல்வேறு விஷயங்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை என்பது தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.

After husband permission Namibia Tribes called Himba women welcomes guests by having relationship with them

இந்தியாவை எடுத்து கொண்டாலும் கூட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்கள் பல்வேறு கலாசாரங்களை பின்பற்றி வருகின்றனர். இதனால் அனைத்து மக்களும் ஒரே மாதிரியான பண்பாட்டை கொண்டுள்ளனர் என கண்ணை மூடிக்கொண்டு கூறிவிட முடியாது.

இத்தகைய சூழலில் தான் ஒரு பழங்குடியினத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதில் வித்தியாசமான முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக நம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் நாம் என்ன செய்வோர். வாசலில் நின்று அவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்று டீ அல்லது காபி அல்லது குளிர்பானம் அல்லது தண்ணீர் கொடுத்து உபசரிப்போம். அதன்பிறகு அவர்களிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு சைவம் அல்லது அசைவ உணவு விருந்து வழங்கி வழியனுப்பி வைப்போம்.

ஆனால் ஒரு பழங்குடியினத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் பெண்கள் உடலுறவு வைத்து வரவேற்கும் நடைமுறை இன்று உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், இது முற்றிலும் உண்மை. பொதுவாக மற்ற பிரிவு மக்களுடன் பழங்குடியினத்தவர்கள் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆனால் தற்போதைய மாறி வரும் கலாசாரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களும் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் வசித்து வந்தாலும் நகரங்களில் வாழும் மக்களை போல் மாற தொடங்கிவிட்டனர்.

ஆனால் இருப்பினும் பல பழங்குடியினத்தவர்கள் இன்னும் கூட தங்களின் பழைய பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அப்படி பழங்கால பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வரும் ஒரு பழங்குடியினத்த பெண்கள் தான் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் உடலுறவு வைத்து வரவேற்கின்றனர். இந்த மாறுபட்ட வரவேற்பு கலாசாரம் எங்கு உள்ளது. இத்தகைய விசித்திரமான நடைமுறையை பின்பற்றும் அந்த பழங்குடியினர் யார்? அவர்கள் எங்கு வசிக்கின்றனர்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த வித்தியாசமான வரவேற்பு கலாசாரம் என்பது தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடியின மக்களிடம் தான் வழக்கத்தில் உள்ளது. இவர்கள் ஒரு நாடோடி பழங்குடியினத்தவர்கள். ஒட்சிகிம்பா எனும் மொழியை பேசுகின்றனர். நமீபியாவின் குனென் எனும் இடத்தை சுற்றி இவர்கள் கூட்டமாக வசிக்கின்றனர். மொத்தம் 50 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்கள் வேட்டையாடுவதை பிரதான தொழிலாக கொண்டுள்னர். பெண்கள் வீட்டில் உணவு சமைப்பது, வீடு, குழந்தைகளை பராமரிப்பதை தொழிலாக வைத்துள்ளனர். மேலும் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.

இங்குள்ள ஆண்களும், பெண்கள் மேலாடை அணிவது இல்லை. இடுப்பில் மட்டும் விலங்குகளின் தோலால் ஆன பாவாடை போன்ற ஆடையை அணிகின்றனர். இந்த பழங்குடியினத்தில் ஆண்களிடம் பலதார மணம் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பழங்குடியினத்தவர்களிடம் விருந்தோம்பல், உபசரிப்பு முறையில் தாராளம் காட்டப்படுகிறது. இதற்கு உதாரணம் என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு மனைவியையே அவர்களின் கணவர்கள் தாரை வார்க்கின்றனர்.

அதாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை முதல் நாள் இரவில் மனைவியுடன் உடலுறவு வைக்க அனுமதிக்கின்றனர். விருந்தாளிகளை நன்கு கவனிக்க வேண்டும் என்ற பழக்கம் வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தான் இதனை அவர்கள் செய்கின்றனர். மேலும் இந்த உடலுறவு என்பது அவர்களின் வீட்டிலேயே நடக்கும். பொதுவாக அவர்கள் புற்களை பயன்படுத்தி வேயப்பட்ட குடிசைகளில் தான் தங்குவார்கள். இதில் 2 அறைகள் இருந்தால் கணவன் ஒரு அறையில் இருப்பதோடு, மனைவி இன்னொரு அறையில் விருந்தாளியுடன் உடலுறவு வைப்பார். அதேவேளையில் குடிசையில் ஒரு அறை மட்டுமே இருந்தால் அதில் விருந்தாளியுடன் மனைவி தங்குவார். கணவர் குடிசைக்கு வெளியே இரவை கழிப்பார். இது அங்குள்ள கலாசாரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த பழங்குடியினத்தில் உள்ள பெண்கள் பெற்றோர் மற்றும் கணவரின் வார்த்தைக்கு அதிக மதிப்பளிப்பார்கள். இதனால் தான் பெற்றோர் சொல்லும் நபரை அவர்கள் திருமணம் செய்வதோடு, கணவர் கூறும்போது விருந்தாளிகளை கவனிக்க உடலுறவும் வைக்கின்றனர். இது தற்போதைய காலத்திலும் நடைமுறையில் உள்ளதால் பெண்ணடிமைத்தனம் என பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் ஹிம்பா பழங்குடியினத்தவர்கள் இன்றும் அந்த பழக்க வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

இது நமக்கு புதிதாக தெரிந்தாலும் கூட அவர்களது இனத்தில் இது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் தற்போது மாறி வரும் கலாசாரத்தால் சில பெண்கள் தற்போது இதுபோன்ற செயலை ஏற்க தயங்குகின்றனர். இருப்பினும் அந்த இனத்தின் கலாசாரத்தால் வேறு வழியின்றி விருந்தாளிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+