Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டுமா.. கங்குவா படத்தை தொடர்ந்து அஜித்துடன் இணையும் சிவா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கங்குவா 2 படம் வெளியாகும் என்றும் ஏற்கனவே கூறியிருந்தனர். கங்குவா படத்துக்கு முன்பாக, இயக்குநர் சிறுத்தை சிவா அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட கடந்த இரண்டரை ஆண்டுகளாக சூர்யாவின் படம் திரைப்படம் வெளியாகவில்லை.

ajith

ஏற்கனவே கங்குவா படத்தின் ட்ரெய்லர், டீசர், இசை வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தவிர படக்குழுவினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றிய பில்டப்களை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்தியளவில் இந்தப் படம் மிகப்பெரிய சாதனையை படைக்கும்.

டிசம்பர் மாதம் பான் இந்தியா ரெக்கார்டுடன் வெற்றி விழா கொண்டாடுவோம். ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களுடன் வசூல் ரிப்போர்ட்டை வெளியிடுவோம். கங்குவா பார்ட் 1 உடன் கூட யாராவது கிளாஸ் விடுவார்கள். ஆனால் கங்குவா பார்ட் 2 உடன் யாரும் கிளாஷ் விட மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

சூர்யா, சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, மதன் கார்த்தி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பலருமே கங்குவா குறித்து பயங்கர எதிர்பார்ப்புகளை தூண்டும் விதமான கருத்துகளை கூறியிருந்தனர். இந்நிலையில் கங்குவா படம் நேற்று வெளியானது. முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக படம் அமைந்துவிட்டதாக ரிவ்யூகள் வரத்தொடங்கின.

படம் பார்த்த பெரும்பாலான மக்கள் நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். முதல்நாளில் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.58.62 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ரசிகர்களின் படத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

முக்கியமாக படம் முழுவதுமே சத்தமாக இருப்பதாக புகார் கூறினர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரசிகர்கள் வைத்துள்ள குறைகளை சரிசெய்வோம் என கூறியிருந்தார். கங்குவா 2 படத்தின் அப்டேட் குறித்தும் பகிர்ந்திருந்தார்.

கங்குவா 2 படம் எடுப்பது உறுதி. அதற்கு முன்பாக சூர்யாவுக்கு சில கமிட்மென்ட்கள் உள்ளன. அதேபோல இயக்குநர் சிவாவுக்கும் கமிட்மென்ட் உள்ளது. சிவா அடுத்து நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கவுள்ளார். அது முடிந்தவுடன் கங்குவா 2 படத்துக்கான பணிகள் தொடங்கும் என்று கூறினார்.

இதன்மூலம் சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி ஐந்தாவது முறை இணைவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்கள் இந்தக் கூட்டணியில் வெளியாகியிருந்தது. கங்குவா புரோமோ ன்களின் போது இயக்குநர் சிவாவே, அஜித்துக்கு கதை சொல்லியிருப்பதாக கூறியிருந்தார். அதை தற்போது ஞானவேல் ராஜா உறுதி செய்துள்ளார்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படம் பொங்கல் பண்டிகைக்கும், விடாமுயற்சி ஏப்ரல் மாதத்திலும் வெளியாகும் என கூறப்படுகிறது. அது முடிந்தவுடன் சிவா - அஜித் பணிகள் தொடங்கும்.

அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணைவது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடைசியாக இவர்கள் இணைந்த விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைகிறது என ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில் சிவா இயக்கிய கடைசி இரண்டு படங்களான அண்ணாத்த, கங்குவா தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்களின் மற்றொரு தரப்பில் மீண்டும் மீண்டுமா. வேண்டாம். ப்ளீஸ் என்றும் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+