தாலி கட்டியதும் விஜயகாந்த் மணக் கோலத்தில் போனது எங்கு தெரியுமா? அவரே எதிரா திரும்பினாரே! சோகம்!
சென்னை: விஜயகாந்த் திருமணம் நடந்த அதே நாளில் தான், அவரது நீண்டகால நண்பரான சுந்தர்ராஜனும் திருமணம் செய்து கொண்டார். பிரேமலதாவுக்கு தாலி கட்டிய கையோடு, சுந்தர்ராஜன் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தினார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் நீண்டகால நண்பராக இருந்தவர் மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன். விஜயகாந்த்தின் உதவியாளராகவும், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் அவர் இருந்தார். அவரது திருமணமும், விஜயகாந்த்தின் திருமணம் நடைபெற்ற அதே நாளில் தான் மதுரையில் நடந்தது.

விஜயகாந்த், 37 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாததால், 'விஜயகாந்த் திருமணம் செய்துகொள்ளும் நாளன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்' என்று அன்புப் பிடிவாதம் காட்டினார் சுந்தர்ராஜன். சபதம் எடுத்து அதன் படியே விஜயகாந்த்தின் திருமணம் நடந்த அன்றே தானும் திருமணம் செய்து கொண்டார்.
1990ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, மதுரையில் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த்தின் திருமணத்தை நடத்தி வைத்தார். பிரேமலதாவிற்கு தாலி கட்டிய கையோடு, மணக்கோலத்தில், தனது நண்பர் சுந்தரராஜன் திருமணத்திற்குப் போய் அவரை வாழ்த்தினார் விஜயகாந்த். விஜயகாந்த் உடனே எப்போதும் இருந்த சுந்தர்ராஜன், அவரின் அன்பைப் பெற்றிருந்தார்.

தேமுதிக கட்சியை தொடங்கிய பிறகு, அதன் முதல் பொருளாளராக தனது நீண்டகால நண்பரான சுந்தர்ராஜனையே நியமித்தார் விஜயகாந்த். சுந்தர்ராஜனுக்கு 2011 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் சீட் கொடுத்து, அவரை எம்.எல்.ஏ ஆக்கி சட்டசபைக்கு அழைத்துச் சென்றார் விஜயகாந்த்.

எனினும், அதன் பிறகு, விஜயகாந்த் - சுந்தர்ராஜன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், தேமுதிகவைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் பலரும் அதிமுகவில் சேருவதற்கு முக்கிய காரணமாகவும், பாலமாகவும் இருந்தார் சுந்தர்ராஜன். மேலும், விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தும் பேசினார்.

50 ஆண்டுகால நண்பரான சுந்தரராஜன், தனது நிழல் போல இருந்துவிட்டு தனக்கு எதிராகத் திரும்பியது விஜயகாந்த்துக்கு பெரும் கவலையை கொடுத்தது. கடந்த 2020ஆம் ஆண்டு சுந்தர்ராஜன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications