எம்ஜிஆருக்கு பின் புதிய சாதனை படைத்த விஜய்.. வரலாறு திரும்பியது! முதல் தேர்தலிலேயே ஆட்சி அரியணை
சென்னை: எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விஜய்.. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்று 34.9% வாக்குகள் பெற்று வரலாறு படைத்து இருக்கிறார். கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் கட்சி தொடங்கிய பின் நேரடியாக முதல்வராகும் வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய் பெற்றுள்ளார்.

ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர்
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கும் முன்பே நீண்ட காலமாக திமுகவில் பயணித்தவர். திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், அக்கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளரை எம்.ஜி.ஆர் களமிறக்கினார்.
பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் களம் கண்டார். பெரும் தொண்டர்கள் படையை வைத்து இருந்த எம்.ஜி.ஆர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். 1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். முதல் தேர்தலில் எம்.ஜி.ஆர் 30.4% வாக்குகள் பெற்றார்.
சிவாஜி முதல் கமல் வரை
அதன்பிறகு எம்.ஜி.ஆர் மறைவு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தொடர்ந்து 3 சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுகவே வெற்றி பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன் என எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர்.
அவர்களில் விஜயகாந்த் மட்டுமே, எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் தாக்கத்தை முதல் தேர்தலில்யே ஏற்படுத்தினார். இதற்கு பிறகு அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி, கொரோனா உள்ளிட்டவை காரணங்களால் முடிவில் இருந்து பின்வாங்கினார். 2021 தேர்தலில் முதல் தேர்தலை சந்தித்த கமல்ஹாசனும் தோல்வியையே சந்தித்தார்.
வரலாறு படைத்த விஜய்
இந்த சூழலில் தான் விஜய் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி மாதம் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்காத விஜய், 2026 சட்டசபை தேர்தல் தான் முதல் இலக்கு என்று கூறினார். மேலும் அப்போதே திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்தார் விஜய்.
2026 தேர்தலில் களம் இறங்கிய விஜய் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்று வரலாறு படைத்தார். இத்தனைக்கும் தனியாக களமிறங்கி விஜய் இந்த சாதனையை படைத்தார். விஜய் முதல் தேர்தலிலேயே 34.9% வாக்குகள் சதவீதம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
நாளை பதவியேற்கிறார்
வெறும் சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது.. கூட்டம் ஓட்டாக மாறாது.. சினிமா பிரபலங்கள் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும் என முன் வந்த பல விமர்சனங்களையும் பொய்யாக்கி.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி.. முதல்வராக ஆட்சி பொறுப்பேற்கிறார் விஜய்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications