சென்னைக்கு குட்நியூஸ்.. ஓராண்டுக்கு பின் வேளச்சேரி - பீச் இடையே இன்று முதல் ரயில்! டைமிங் இதுதான்
சென்னை: 14 மாதங்கள் கழித்து சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் 45 முறையும், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கும் தினமும் 45 முறையில் மின்சார ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் பல லட்சம் மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் இந்த ரயில்களில் கூட்டம் என்பது அலைமோதும்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இந்த மின்சார ரயில்கள் உள்ளன.
இந்நிலையில் தான் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவைகளில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். சில நேரங்களில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் முனையம் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 4.3 கி.மீ தொலைவுக்கு 4வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்தது.
இந்த பணியின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி, , வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நிறுத்தப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது
அதாவது சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போதை 4வது வழித்தட பணி நிறைவு பெற்றுள்ளது. இதனால் மீண்டும் சென்னை கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை என்பது இன்று முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
MRTS EMU train services between Chennai Beach and Velachery will resume from October 29.10.2024 (Tomorrow).
— Southern Railway (@GMSRailway) October 28, 2024
Passengers, kindly take note.#SouthernRailway pic.twitter.com/JUT6kwc5g8
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில்கள் இயக்கப்படும் நேர அட்டவணையையும் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தினமும் காலை 4.53 மணி, 5.18 மணி, 5.43, 6.08, 6.33, 6.58, 7.23, 7.48, 8.13, 8.38, 9.03, 9.28, 9.53, 10.18, 10.43, 11.08, 11.33, 11.58, மதியம் 12.23, 12.48, 1.13, 1.38, 2.03, 2.28, 3.18, 3.43, மாலை 4.08, 44.33, 4.58, 5.23, 5.48, 6.13, 6.38, இரவு 7.03, 7.28, 7.53, 8.18, 8.43, 9.08, 9.33, 9.58, 10.23, 10.48, 11.23 ஆகிய நேரங்களில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு வேளச்சேரியை நோக்கி செல்லும்.
மறுமார்க்கமாக வேளச்சேரியில் இருந்து தினமும் காலை 4, 4.25, 4.50, 5.15, 5.40, 6.05, 6.30, 6.55, 7.20, 7.45, 8.10, 8.35, 9.00, 9.25, 9.50, 10.15, 10.40, 11.05, 11.30, 11.55, மதியம் 12.20, 12.45, 1.10, 1.35, 2.00, 2.25, 3.15, 3.40, மாலை 4.05, 4.30, 4.55, 5.20, 5.45, 6.10, 6.35, 7.00, 7.50, 8.15, 8.40, 9.05, 9.30, 9.55, 10.20 மணி உள்ளிட்ட நேரங்களில் மின்சார ரயில் சென்னை பீச்சுக்கு புறப்பட்டு செல்லும். 14 மாதங்களுக்கு பிறகு இந்த ரயில் சேவை தொடங்கி உள்ளதால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications