சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டினப்பாக்கம் போய் மெரீனாவிற்கும் சிக்கல்.. கொத்து கொத்தாக படியும் நுரை படலம்.. என்ன நடக்கிறது?

சென்னையில் பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நுரை படலம் படிந்தது தொடர்ந்து தற்போது மெரினா பீச்சிலும் அதிக அளவில் நுரை படலம் ஒதுங்கி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பீச்களில் குவிந்த மர்ம நுரை படலம்..என்ன பின்னணி?

    சென்னை: சென்னையில் பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நுரை படலம் படிந்தது தொடர்ந்து தற்போது மெரினா பீச்சிலும் அதிக அளவில் நுரை படலம் ஒதுங்கி வருகிறது.

    சென்னையில் உள்ள பல்வேறு பீச்கள் கடந்த சில நாட்களாக கழிவு நீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இது அங்கிருக்கும் மக்களை பெரிய அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

    பட்டினபாக்கம் அடுத்துள்ள சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், இராயப்பேட்டை அருகே இருக்கும் மற்ற கடல் பகுதியிலும் இன்று அதிக அளவில் நுரை கரை ஒதுங்கியது. மொத்தமாக கரையை மூடும் அளவிற்கு நுரை கரை ஒதுங்கியது.

    அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே டைட்டானிக் ஹீரோ காப்ரியோதான்.. பிரேசில் அதிபர் புகார்.. பரபரப்பு!அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே டைட்டானிக் ஹீரோ காப்ரியோதான்.. பிரேசில் அதிபர் புகார்.. பரபரப்பு!

    மெரினா

    மெரினா

    இந்த நிலையில் தற்போது மெரினா பீச்சிலும் அதிக அளவில் நுரை படலம் ஒதுங்கி வருகிறது. இன்று காலைதான் மெரினாவில் இந்த நுரை படலம் படர்ந்தது. மெரினாவில் நீண்ட கடற்கரை முழுக்க இந்த நுரை குவிந்தது. வெள்ளை நிறத்தில் மிகவும் திடமாக இந்த நுரை இருந்தது.

    சென்னை பீச்

    சென்னை பீச்

    இந்த நுரை தற்போது சென்னையின் மற்ற பீச்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது என்று கடலியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல் சென்னை மெரினாவில் உள்ள நுரை காரணமாக மீன்கள் பாதிக்கப்படும். நிறைய மீன்கள் இதனால் இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    அங்கிருக்கும் தண்ணீரும் இதனால் பாதிக்கப்படும். அதில் நச்சுத்தன்மை சேரும். அதனால் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அங்கு குளிக்க வேண்டாம். மக்கள் மெரினாவில் கால் வைப்பதை கூட தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    மாசுபாடு காரணம்

    மாசுபாடு காரணம்

    இதற்கு முழுக்க முழுக்க மாசுபாடுதான் காரணம். இராயப்பேட்டை தொடங்கி சென்னையில் இருக்கும் தொழிற்சாலை கழிவுகள், மனித கழிவுகள் எல்லாம் இந்த கடலில்தான் கலக்கிறது. இதனால்தான் தற்போது நுரை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக இந்த நுரை எல்லாம் கடலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே வருகிறது.

    யாருடைய தவறு

    யாருடைய தவறு

    இது முழுக்க முழுக்க மனித தவறுதான். நாம்தான் இதற்கு பொறுப்பு என்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தின், சென்னையின் அடையாளம், ஆசியாவின் பெரிய பீச் என்ற பெயர் எல்லாம் பெற்ற மெரீனாவை தற்போது நுரை ஆக்கிரமித்து இருக்கிறது!

    English summary
    After Pattinappakkam, Now Marina also facing the Foam forming issue in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X