கருணாநிதி என் அப்பா மாதிரி.. உருகிய இளையராஜா! அன்னைக்கு மோடியை பாராட்டினாரே.. திடீர்ன்னு என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது தந்தையை போன்றவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார்.

பாராட்டு

பாராட்டு

அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று குறிப்பிட்டார். இளையராஜாவின் இந்த பேச்சை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். பாஜகவில் இளையராஜா இணைய போகிறாரோ என்று பலரும் கேள்வி எழுப்பி, விமர்சனங்களை வைத்து இருந்தனர்.

 கருணாநிதி பேச்சு

கருணாநிதி பேச்சு

இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அதாவது இளையராஜா பாஜகவில் இணைவார் என்று வெளியான வதந்திகளுக்கு கங்கை அமரன் மூலம் இளையராஜாவே முற்றுப்புள்ளி வைத்தார்.

 கருணாநிதி

கருணாநிதி

இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது தந்தையை போன்றவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக கோவையில் நேற்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்களுக்கு இடையே பல்வேறு சுவாரசிய விஷயங்களை பற்றி பேசினார். இந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதை, அதை முன்னிட்டு கருணாநிதிக்கும் தனக்கும் இடையிலான உறவு குறித்து பேசினார்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

அதில், கலைஞர் கருணாநிதி வழியில் சென்று கொண்டு இருக்கிறார் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பார் என்று முழு மனதுடன் நம்புகின்றேன். கருணாநிதி என் தந்தைக்கு சமமானவர். எனக்கு இசைஞானி என்று பெயர் வைத்தவர் கலைஞர்தான். எனக்கு என் அப்பா ஞானதேசிகன் என்று பெயர் வைத்தார். கருணாநிதி அதில் இசையை சேர்த்துவிட்டார்.

கருணாநிதி ஸ்டாலின்

கருணாநிதி ஸ்டாலின்

மக்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்ட தலைவர் கருணாநிதி. அவரின் பாதையை ஸ்டாலின் பின்பற்றுகிறார். மு.க.ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன், என்று இளையராஜா பாராட்டி உள்ளார். இளையராஜா சமீபத்தில் மோடியை பாராட்டிய போது அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினை இளையராஜா பாராட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+