அதிமுகவில் இணைந்து 4 மாதங்கள்.. முக்கிய பொறுப்புக்கு வந்த மைத்ரேயன்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1991ஆம் ஆண்டு பாஜகவின் துணைத் தலைவராக இருந்து வந்த மைத்ரேயன், 1999ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இதன்பின் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை சந்தித்தார்.

edapadi palanisamy maitreyan aiadmk

ஆனாலும் 2002ஆம் ஆண்டு அதிமுக தரப்பில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 3 முறை அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தார். இதன்பின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையில் மோதல் வெடித்தது.

அப்போது முதலில் ஓபிஎஸ் பக்கம் இருந்த மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு திடீரென ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எந்த கட்சியிலும், அணியிலும் இணையாமல் அமைதி காத்த மைத்ரேயன், திடீரென டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தாலும், அவருக்கு எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு பாஜக தலைமையுடனும் பெரிதாக இணக்கம் காட்டவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார்.

அதிமுகவில் இணைந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுசாமி, தர்மபுரியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், முன்னாள் எம்பி மைத்ரேயன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி ஆகியோர் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+