சைந்தவி- ஜி.வி. பிரகாஷ் முதல் நாக சைதன்யா- சமந்தா வரை! தென்னிந்திய பிரபலங்களின் டைவர்ஸ் லிஸ்ட்!
சென்னை: சைந்தவி- ஜி.வி.பிரகாஷ் தம்பதி பிரிவை அறிவித்துள்ள நிலையில் இதுவரை அண்மையில் எந்தெந்த நட்சத்திரங்கள் விவாகரத்தை அறிவித்தன என்பதை பார்ப்போம்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் தற்போது விவாகரத்துகள் அதிகமாகியுள்ளன. யாருமே வேண்டுமென்றே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதில்லை. தம்பதிக்குள் ஒத்து வராத நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் கஷ்டப்பட்டு வாழ்வதை காட்டிலும் பிரிந்து செல்வதே மேல் என கருதுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலான நட்சத்திர தம்பதிகள் பிரியும் போது ஒருவரை ஒருவர் ஏளனமாக பேசுவதோ தவறான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதோ இல்லாமல் நாகரீகமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது பாடகி சைந்தவியும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. நீண்ட யோசனைக்கு பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக சைந்தவியும் ஜி.வி.பிரகாஷும் பிரிந்து செல்வதாக தகவல்கள் வந்த நிலையில் இன்று அவர்களே அதை உறுதிப்படுத்திவிட்டார்கள்.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார், வயலின் கலைஞர் சைந்தவியை காதலித்து இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அன்வி என்ற மகளும் உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து பிரிந்து சென்ற தம்பதிகள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
நாக சைதன்யா- சமந்தா: இணையத்தில் மிகவும் அன்புக்குரிய தம்பதியாக பேசப்பட்டனர். இருவரும் சேர்ந்து 2010ஆம் ஆண்டு யே மாயா என்ற படத்தில் நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்துவிட்டு 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 4 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற இவர்களுடைய வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அமலா பால்- ஏ.எல்.விஜய்: 2010ஆம் ஆண்டுகளில் இருவரும் மிகவும் ரொமான்டிக் ஜோடியாக இருந்தனர். 2011 ஆம் ஆண்டு தெய்வ திருமகள் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். அந்த படத்தில் அமலா பால் நடித்தார். இதையடுத்து இருவருக்குள்ளும் காதல் பட்டாம்பூச்சி பறந்தது. பின்னர் 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் இரு ஆண்டுகளே இணைந்து வாழ்ந்தனர். இருவரும் பிரிவதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்து பிரிந்து விட்டனர். இதையடுத்து ஏ.எல்.விஜய் 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அது போல் கடந்த ஆண்டு அமலா பாலும் அவருடைய ஆண் நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.
விஷ்ணு விஷால்- ரஜினி: பிரபல நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications