டெல்லிக்கே வர சொல்லிட்டாங்களே! அண்ணாமலை இருக்கட்டும்.. இவர் ஏன் போகிறார்? ஃபிளைட் ஏறிய புள்ளி! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இவரின் பயணமே பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான்.. இன்னொரு புள்ளியும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளாராம்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். கள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். கடந்த வாரம், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று நீக்கப்பட்டார்.

அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார், என்று அண்ணாமலை அறிவித்தார்.

உட்கட்சி மோதல்; தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன் என்றெல்லாம் விமர்சனம் வைத்தார்.

அண்ணாமலை ஆப்சென்ட்; இதற்கு இடையில் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.

தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இவரின் பயணமே பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை தலைவர் மாற்றத்திற்கான அறிகுறி என்றெல்லாம் கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான்.. இன்னொரு புள்ளியும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளாராம். பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் ஒரு புள்ளி டெல்லிக்கு பறந்து உள்ளாராம். அவரை அழைத்து டெல்லி பாஜக மேலிடம் முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய தொடங்கி உள்ளதாம். இதனால் அடுத்து பாஜகவில் என்ன நடக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+