"ஆட்சி முடிந்ததும்".. பிடிஆர் சொன்ன அந்த வார்த்தை! பதறியடித்த தலைகள்.. "மன்னிச்சிடுங்க".. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த போஸ்ட் ஒன்று இணையத்தில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதில் மூத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதி அமைச்சர் பொறுப்போடு கூடுதலாக அவருக்கு புள்ளியில் துறை பொறுப்பும் வழங்கப்பட்டது. புள்ளியில் துறையில் பிடிஆர் அனுபவம் பெற்றவர் என்பதால் அவருக்கு அந்த துறை வழங்கப்பட்டது.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறைக்கு திடீரென சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் பிடிஆர் தனது செயல்பாடு தொடர்பான வார ரிப்போர்ட்டை கொடுத்து உள்ளார். வாராந்திர ரிப்போர்ட் ஒன்றை அமைச்சர் கொடுப்பது இதுவே முதல்முறை. இதில் இம்பரஸ் ஆன நிலையில்தான் பிடிஆருக்கு புள்ளியில் துறை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிடிஆர் மனசு குளிரும் விதமாக அவருக்கு விருப்பமான துறையை கூடுதலாக ஸ்டாலின் கொடுத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

பிடிஆர்
இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்து இருந்தார். அதில், 2023க்கான என்னுடைய சந்தோசமான விருப்பம் இது. புத்தாண்டு என்பது தவிர்க்கவே முடியாத மாற்றத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம். இந்த நேரம் என்பது மதிப்புமிக்கது மற்றும் நம்பிக்கையை தரக்கூடியது. 2023ல் என்னுடைய கோல் என்று பார்த்தால் நான் செய்ய வேண்டிய மாற்றங்கள், செய்து கொண்டு இருக்கும் மாற்றங்கள் பற்றி புத்தகம் எழுத வேண்டும். இந்த புத்தகத்தை ஆட்சி முடிந்ததும் நான் வெளியிடுவேன் என்று கூறி இருந்தார்.

பிடிஆர் சர்ச்சை
பிடிஆரின் இந்த போஸ்ட்தான் சர்ச்சையாகி உள்ளது. ஏனென்றால் இந்த அரசு முடிந்ததும் புத்தகம் வெளியிடுவேன் என்று அவர் கூறி உள்ளார்.அதற்கு மேல் 2023 விருப்பம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் பலரும் 2023ல் அரசு முடிய போகிறதா? ஏன் இப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீங்க போகிறீர்களா என்றெல்லாம் கேட்டு வந்தனர். திமுக தொண்டர்கள் பலர் பதறியடித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு இருந்தனர்.

பதில்
இந்த போஸ்ட் பெரிய சர்ச்சையான நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்களால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த புத்தகத்தில் பல நிகழ்கால தகவல்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். அதனால் நான் அது போன்ற புத்தகங்களை அமைச்சராக இருக்கும் போது வெளியிட முடியாது. அது எந்த வருடமாக இருந்தாலும் சரி. எல்லா அமைச்சரும் ஒருநாள் அமைச்சரவையில் வெளியேறத்தானே வேண்டும், என்று பிடிஆர் கூறி இருக்கிறார். அதாவது இப்போது தான் போஸ்டை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆட்சி முடியும் என்றெல்லாம் சொல்லவில்லை, எதிர்காலத்தில் நான் அமைச்சராக இல்லாத காலத்தில் இந்த புத்தகத்தை வெளியிடுவேன் என்றுதான் கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications