இதோ பாருங்க இந்தியா மேப்.. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை சுறுங்கிப் போச்சு.. பாஜக விஸ்வரூபம்
சென்னை: தற்போது நடந்து முடிந்த 4 மாநில தேர்தல் முடிவின் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களின் மேலும் உயர்ந்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்தும் முழு விவரத்தை இங்கே காணலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் தேர்தல் களத்தில் செமி பைனல் என்றும் வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மிசோரம் மாநில தேர்தல் முடிவானது நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி முகத்தில் உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்தது. மற்ற சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைத்து வந்தந்து. ஆனால் தற்போது முடிந்த தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறித்துள்ளது பாஜக.
பாஜக ஆளும் மாநிலங்கள்: வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு மவுசு இன்னமும் சற்றும் குறையாமல் இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. மூன்று மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியா நேற்றும் இன்றும்
— Oneindia Tamil (@thatsTamil) December 3, 2023
More Details: https://t.co/E0ShIewdkf#ElectionResults #Electionresults2023 #AssemblyElections2023 #ResultsWithOneindia #தேர்தல்முடிவுகள்2023 pic.twitter.com/0sj6OKR9NF
ஏற்கனவே மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தது. தற்போது கூடுதலாக ராஜஸ்தான், சத்தீஷ்கரிலும் பாஜக வென்றுள்ளதன் மூலம் அந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, உத்தரகாண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்: தற்போது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது வெறும் 3 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகா, இமாசல பிரதேசம் ஆட்சியில் உள்ள நிலையில், தற்போது தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் தற்போது பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறப்பட்ட நிலையில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அங்கும் பாஜக வெற்றி பெறுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தாலும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரபிரதேசத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?











Click it and Unblock the Notifications