அடேங்கப்பா.. கமலை டிவிட்டர் டிரண்டிங்கிலும்.. அதிரடியாக வீழ்த்திய வானதி சீனிவாசன்!
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக, பாஜக.,வின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக.,விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் அதிமுக.,வின் கோட்டையாக கருதப்பட்ட கோவை தெற்கு தொகுதி பாஜக.,விற்கு ஒதுக்கப்பட்டது. பொதுவாகவே கோவை மாவட்டத்தில் பாஜக.,விற்கு செல்வாக்கு அதிகம் என்பதால் வானதி சீனிவாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் துவங்கியது முதல் கமல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கமலுக்கே இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கருத்துக்கணிப்புக்களும் கூறின. இதனால் கமல் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது என்ற நிலையில், கடைசி சமயத்தில் வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றார்.

கமல் மற்றும் வானதி சீனிவாசன் இடையே நிலவியது கடும் போட்டி, ட்விட்டர் டிரெண்டிங்கில் கூட இடம்பிடித்தது. கமலஹாசன் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. கமல் வெற்றி பெற வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, கடைசி நிமிடத்தில் 1500 ஓட்டு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

தேர்தலில் மட்டுமின்றி ட்விட்டர் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தில் இருந்த கமலை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். வானதி சீனிவாசன் என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications