சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் திடீரென தோன்றிய பள்ளம்.. வாகன ஓட்டிகள் பீதி!
Recommended Video
சென்னை: மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய சிக்னலாக உள்ளது. மத்திய கைலாஷ் சிக்னலை கடந்துதான் ஓஎம்ஆர், ஈசிஆர், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. முக்கிய சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் சிமென்ட் கொண்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அடைத்தனர். இந்நிலையில் நேற்றிரவு அதே இடத்தில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஊழியர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர். பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது சென்னை அண்ணா சாலையில் திடீர் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் மெட்ரோவுக்கு தொடர்பில்லாத மத்திய கைலாஷ் பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications