வீட்டுக்கே வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பை 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தியது தமிழ்நாடு அரசு. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை கடந்த ஆகஸ்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பை 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் வாயிலாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15, 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42, 657 பயனாளர்களும், 91,9,069 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் என ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 21,70,455 பயனாளர்களுக்கும் அவர்களின் இல்லங்களிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பு 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தப்பட்டுள்ளதால் இன்னும் கூடுதலான மக்கள் பயன்பெற உள்ளனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications