அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பம்..அனலை தணிக்க வரும் கோடை மழை..நிம்மதியில் மக்கள்
சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இம்மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலின் அனலை தணிக்க வருணபகவான் கருணையால் எங்கும் கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். அப்போது சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் அசானி புயல் உருவாகி மழை கொட்டியது. இந்த ஆண்டும் அதே போல பல ஊர்களில் கோடை மழை கொட்டி வருகிறது. வரும் 6ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் எனவும் வங்கக்கடலில் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருணபகவான் கருணையால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தை எளிதாக கடந்து விடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜோதிட ரீதியாக நெருப்பு கோள் சூரியன் மேஷ ராசி செவ்வாயின் வீடாகும். நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்புக் கோள் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன், மேஷத்தில் சஞ்சரிக்கும் போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது. கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால், அக்னி நட்சத்திர காலம் தோஷ காலமாக கருதப்படுகிறது.
அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை உச்சரிக்கலாம்.
இரண்டு முகம் கொண்டவர் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர். அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.
அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள். ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. அக்னியின் முக்கிய குணம் பிரகாசம், ரூபம் ஹிரண்மயம் அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை கொண்டு சேர்க்கிறார்.
அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். தோஷங்கள் மற்றும் நோய்களில் இருந்து தப்பிக்க பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
அக்னி தேவனுக்கு பிரசாதமாக முறையே ஞாயிற்றுக்கிழமை பாயசம், திங்கட்கிழமை பால், செவ்வாய்கிழமை தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் கிழமை தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் கிழமை சர்க்கரை மற்றும் நெய், வெள்ளிக்கிழமை வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனிக்கிழமை பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும். இதன் மூலம் அக்னி நட்சத்திர காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications