வீடியோவே வந்துருச்சா.. மின்னலை விழுங்கி.. மின்சாரத்தை கொப்பளித்து.. எடப்பாடி டக்கர்டோய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் அரை நூற்றாண்டாக எதிரும், புதிரும் இருந்த திமுக, அதிமுக சட்டசபையில் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் இருவரையும் தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. சட்டசபையில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பட்ஜெட் குறித்த விவாதம், காவிரி பிரச்சனை சீரியஸாக பேசும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பன்ச் டைலாக் செம வைரலாகி வருகிறது. மின்னலை விழுங்கி. மின்சாரத்தை கொப்பளிக்கும் என்கிற அந்த பஞ்ச் டைலாக்கை வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

சட்டசபை பட்ஜெட் விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "மின்னலை விழுங்கி. மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடியாரின் இதய துடிப்புகளே. வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தின் சன்னிதானத்தில், கலசப்பாக்கம் தொகுதிக்காக நான்காவது முறையாக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு பணிவுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Agri Krishnamoorthy

மின்னலை விழுங்கி

வானம் வானவில்லுக்கு வளைகாப்பு நடத்தும் வசந்த காலத்தை போல, 2026 - 27 நிதிநிலை அறிக்கை மீது பேசுவதற்கு வசந்த வாய்ப்பளித்த அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கத்துடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று பேச்சை ஆரம்பித்தார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டசபையில் சுமார் 10 நிமிடங்கள் பேசினார். அதிமுக ஆட்சியின் முந்தைய சாதனைகள், ஜெயலலிதாவின் புகழ் குறித்தும் அவரின் பேச்சில் இடம்பெற்றது.

ஆனால் எடப்பாடி குறித்த அவரின் பேச்சுதான் மெச ஹைலைட்டாக இருந்தது. முதலமைச்சர் விஜய் சினிமா பன்ச்களை அடிப்பதாக திமுக விமர்சித்து வருகிறது. ஆனால் சினிமா வசனங்கள் தோற்குமளவுக்கு எடப்பாடிக்கு மாஸ் பன்ச் கொடுத்து எலிவேஷன் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி. இது சமூகவலைதளங்களில் வைரலானது. அதிமுகவின் சமீபத்திய நிலையில் எடப்பாடி குறித்து விமர்சிப்பதை தான் அதிகம் கேட்டோம்.

வீடியோவாவே பாடிட்டாங்க

அவரை பாராட்டி பேசுவதற்கு குறைவான ஆட்களே உள்ளனர். சட்டசபையில் காவிரி விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல்வேறு விவகாரங்களில் தவெக, திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அதற்கு நடுவே அக்ரி கிருஷ்ணமூர்த்தி எடப்பாடிக்கு கொடுத்த பன்ச்சும் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூகவலைதளங்களில் எடப்பாடி மின்னலை விழுங்கி, மின்சாரத்தை கொப்பளிப்பது போன்ற வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதுவும் சமூகவலைதளங்களில் செம ஹிட்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+