சிறு வணிகர்களுடன் இணையும் அக்ரோடெக் (Agrotech Mart App) உடன் சிறு குறு மளிகை கடைகளை இணைக்க திட்டம்
சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை (AIFPCL) தலைமை நிறுவனமாக கொண்ட அக்ரோடெக் மார்ட் சென்னையை தலைமை இடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மளிகை கடை, காய்கறி மற்றும் பழக்கடை வணிகர்களையும் இலக்காக வைத்து கிரானா ஸ்டோர் (Kirana Store) என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கிரானா திட்டத்தை 'ஹைப்ரிட் ஆன்லைன்-டு-ஆஃப்லைன் தளம்' (Hybrid Online-to-Offline' platform) அக்ரோடெக் மார்ட் அப்ளிகேஷனுடன் இணைக்க இருக்கிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் அக்ரோடெக் மார்ட்டின் மூலம் குறைந்த விலைக்கு மொத்த வியாபாரத்திற்கான பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய முன்னணி இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக தனது கிரானா ஸ்டோரை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது அக்ரோடெக் நிறுவனம். இந்தியாவிலேயே முதல்முறையாக சுய உதவி குழுக்கள் (SHG) மற்றும் கூட்டு பொறுப்பு குழு (JLG) பெண் உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றும் முறையில் அக்ரோடெக் நிறுவனம் அவர்களுக்கு கடன் உதவியுடன் தொழில் உருவாக்கம் செய்ய வழிவகை செய்து தருகிறது.

இவ்வாறு சிறு மளிகை கடைகளை ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 18 இடங்களில் வெற்றிகரமாக அக்ரோடெக் நிறுவனம் நடத்திவருகிறது. இத்திட்டத்தின் மூலமாக திறன் கட்டிடம் (Capacity Building), புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம் மட்டுமின்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதனால் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி உரிய விலை கிடைக்க பெற செய்கிறது.

இதன் தொடர்ச்சியாகவே அக்ரோடெக் நிறுவனம் சிறு குறு வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு சரக்கு மேலாண்மை, ஜி.எஸ்.டி மென்பொருள் போன்றவையும் கடைக்காரர்களுக்கு அக்ரோடெக் மார்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களையும் சுய உதவி குழுக்களின் துணையோடு இணைக்கும் சேவையும் செய்து தருகிறது.
இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கு சுய உதவி குழுக்களுக்கு எளிய தவணை செய்து தரும் வகையிலும் மளிகை பொருட்களை பெற்று செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து செயல்பட சுய உதவி குழுக்களுக்கு இந்நிறுவனம் அழைப்பு விடுக்கிறது. இது போன்ற கிராமப்புற வளர்ச்சிக்கு உண்டான திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் ஆக்ரோடெக் சிறு, குறு வியாபாரம் செய்யும் கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள் பயனடையும் வகையில் அஃரோடெக் மார்ட் தமிழகம் முழுவதும் மேலும் 50 கிளைகளை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதுபோன்ற திட்டத்தில் முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை இந்த நிறுவனம் வரவேற்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு +91 9884299871
Mail ID : [email protected]
Website : www.agrotechfpc.org
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications