வாவ்.. செம.. உலககோப்பை பைனலுக்காக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.. எப்படி இருக்கு பாருங்க!
சென்னை: 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனல் இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ப்ரௌசராக கூகுள் உள்ளது. இந்த கூகுள் ஒவ்வொரு நாளும் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் 50 ஓவர் கிரிக்கெட் உலககோப்பை பைனல் போட்டியை மையமாக வைத்து கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, மஞ்சள் நிறத்தில் கிரிக்கெட் மைதானத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு அதில் GOOGLE என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் 3வது எழுத்தாக உள்ள O என்ற எழுத்தில் உலககோப்பை மாதிரி இடம்பெற்றுள்ளது. Lஎனும் எழுத்து என்பது கிரிக்கெட் பேட்டை பிரதிபலிக்கிறது.
இன்று நடக்கும் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உள்பட பல வெளிநாட்டு தலைவர்கள் போட்டியை காண உள்ளனர்.
இதுதவிர குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்த போட்டியை நேரில் ரசிக்க உள்ளனர். இதனால் போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா இதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டில் அப்போதைய கேப்டன் டோனி தலைமையில் உலககோப்பையை வென்றது. அதன்பிறகு நடந்த 2 போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலககோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியாக கடந்த 2015ம் ஆண்டில் உலககோப்பையை வென்றது. தற்போத 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த முறை உலககோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா போராட உள்ளது. லீக் போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோற்றாலும் கூட பைனலில் அந்த அணி கடுமையாக போராடும். அதேவேளையில் பேட்டிங், பவுலிங்கில் பலமாக உள்ள இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இன்று உலககோப்பையை உச்சி முகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications