திரையில் வந்த 7700 கோட்.. ஏர் இந்தியா விமானி அந்த எச்சரிக்கையை அனுப்பியது ஏன்? என்ன காரணம்?
அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏடிசிக்கு "மேடே" அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு விமானி ஸ்க்வாக் 7700 என்ற டிரான்ஸ்பாண்டர் கோட் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.
விமானிகள் "ஸ்க்வாக் 7700"-ஐப் பயன்படுத்தும் போது அதன் அர்த்தம் என்ன?
ஒரு விமானி தனது விமானத்தின் டிரான்ஸ்பாண்டரை 7700 ஆக அமைக்கும்போது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) மற்றும் அருகிலுள்ள ரேடார் அமைப்புகளுக்கு விமானம் அவசரநிலையை எதிர்கொள்கிறது என்பதை எச்சரிக்கை செல்லும். அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் அல்லது முக்கியமான பிரச்சனையாக இருக்கலாம்.
அதுதான் மே டே என்று சொல்கிறாரே.. இது ஏன் தனியாக என்று கேட்கலாம். ரேடியோ சிக்னல் பிரச்சனைகளாக மே டே சிக்னல் செல்லாமல் இருந்தாலும் கூட ATCக்கு சிக்னல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக டிரான்ஸ்பாண்டரை 7700 ஆக வைப்பார்கள். இதனால் மே சிக்னல் பெயில் ஆனாலும் டிரான்ஸ்பாண்டரை 7700 ஆக வைப்பதன் மூலம் ATC எச்சரிக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

இதன் பொருள் என்னவென்றால்:
எஞ்சின் செயலிழப்பு
விமானத்தில் தீ விபத்து
வேகமாகக் குறையும் காற்று அழுத்தம்
மருத்துவ அவசரநிலை
கணினி செயலிழப்பு
உடனடி உதவி அல்லது முன்னுரிமை தேவைப்படும் சூழ்நிலை
ஸ்க்வாக் 7700 ஏற்பட்டால் என்ன நடக்கும்?
விமானம் ATC-யிடமிருந்து அதிக முன்னுரிமையைப் பெறுகிறது.
விமானத்திற்கு வழி விடுவதற்காக ATC மற்ற போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தலாம்.
அவசர சேவைகள் உஷார்படுத்தப்பட்டு, அருகிலுள்ள விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
அவசரநிலையின் தன்மையை விளக்க விமானிகள் இன்னும் ரேடியோ மூலம் ATC உடன் தொடர்பு கொள்கிறார்கள்.
தொடர்புடைய குறியீடுகள்:
7500 = கடத்தல் அல்லது சட்டவிரோத தலையீடு
7600 = ரேடியோ தொடர்பு செயலிழப்பு
7700 = பொதுவான அவசரநிலை
ஆனால் இங்கே டிரான்ஸ்பாண்டரை 7700 ஆக வைத்த பின் விமானி எந்த சிக்னலும் கொடுக்க நேரமில்லை என்று கூறப்படுகிறது.
விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டால், விமானிகள் ஸ்க்வாக் 7700 என்ற குறியீட்டைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் விமானம் உடனடியாகக் கவனிக்கப்பட்டு, தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.
May Day அழைப்பு
பொதுவாக விமானத்தில் பிரச்சனை ஏற்படும் போது அதிலும்.. பெரிய பிரச்சனை ஏற்படும் போதே MayDay கால் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த விமான நொடிக்கு நொடி கவனிக்கப்பட்டு உதவி வழங்கப்படும்.
அந்த விமானம் டேக் ஆப் செய்த பின் போதிய அளவிற்கு உயரம் செல்ல முடியவில்லை. டேக் செய்த பின்பும் flops கீழே இறங்கி இருக்கும். இதுதான் விமானம் தொடர்ந்து மேலே செல்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் அப்படி இருந்தும் விமானம் மேலே செல்லவில்லை. இதுதான் விபத்துக்கு காரணமாக மாறி இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், MayDay கால் கொடுத்த பின் அதன் பிறகு விமானம் ஏடிசியின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்ட உடனேயே விமானம் விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications