Ahmedabad plane crash: விமான விபத்து நடக்கப்போகுது.. அன்றே கணித்து எச்சரித்த ஜோதிடர் ஷெல்வி
சென்னை: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள், விமான விபத்துகள் ஏற்படும் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி பிப்ரவரி மாதம் எச்சரித்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று முன்தினம் மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது

தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 230 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், பிரபல ஜோதிடர் ஷெல்வி கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அளித்த பேட்டி ஒன்றில், சனி மற்றும் குருப்பெயர்ச்சியில் உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலையும், இயற்கைப் பேரழிவுகளும், விமான விபத்துகளும் ஏற்படும் என்று எச்சரித்திருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஜோதிடர் ஷெல்வி கூறுகையில், சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்படும். ஆனாலும், சில தவறான முடிவுகளை மனிதர்கள் எடுப்பதால் பிரளயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பஞ்ச பூதங்களின் கோபத்தால் இயற்கைப் பேரழிவுகள், கடல் வெள்ளம், மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் ஆபத்துகள், தீ விபத்துகள், விமான விபத்துகள், பேருந்து, ரயில், கப்பல்களில் விபத்து ஏற்படும் என்று கூறியிருந்தார்.
இதேபோல, 2023 ஆம் ஆண்டில் வடமாநிலங்களில் பங்குனி மாதத்தில் நில அதிர்வு ஏற்படும் என்றும் கணித்திருந்தார். அவர் கணித்தபடியே, 2023 இல் பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு விமான விபத்து குறித்து அவர் எச்சரித்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து குறித்த ஷெல்வியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் கடல் வெள்ளம், இயற்கைப் பேரழிகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ள நிலையில், அவை நடக்குமா என்பது குறித்தும் நெட்டிசன்கள் பலரும் விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications