"ஆபரேஷன் ஸ்பைடர் வெப்".. ஏஐ மூலம் ரஷ்யா மீது அட்டாக்.. உலகம் போர் செய்யும் முறையையே மாற்றிய உக்ரைன்
சென்னை: நேற்று முதல்நாள் இரவு ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் அட்டாக் நடத்தியது. இந்த தாக்குதல் மூலம் உலகம் போர் செய்யும் முறையையே மாற்றி உள்ளது உக்ரைன்.
ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.

மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.
உலகம் போர் செய்யும் முறை
இந்த டிரோன்கள் எல்லாம் ஏஐ மூலம் இயக்கப்பட்டது. அதாவது இந்த குட்டி டிரோன்களை மனிதர்கள் இயக்கவில்லை. ஏஐ மட்டுமே இயக்கி உள்ளது.
இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட குறைந்த விலை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில AI திறன்களை கொண்டது ஆகும்.
இந்த ட்ரோன்கள் டிரக் வழியாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. சிறிய அளவில் கேமரா மேன்கள் பயன்படுத்தும் டிரோன்கள் போல இவை தோற்றம் அளிக்க கூடியவை. ஒரு பேக்கில் வைத்து கொண்டு செல்லும் அளவிற்கு சிறியவை ஆகும் இது.
ஏஐ மூலம் ஏற்கனவே டார்கெட் குறி வைக்கப்பட்டு இவை வழி நடத்தப்பட்டு உள்ளன.
உலகில் போர் செய்யும் முறை
இதன் மூலம் ரஷ்யாவை தாக்கியதோடு உலகில் போர் செய்யும் முறையையே உக்ரைன் மாற்றி உள்ளது. எளிதாக சிறிய டிரோன்களை பயன்படுத்தி எங்கும் நுழைந்து அட்டாக் செய்ய முடியும். மனிதர்கள் இல்லாமலே ஏஐ மூலம் இதை செய்ய முடியும் என்பதை உக்ரைன் நிரூபித்துள்ளது.
இந்த டிரோன்கள் ஏற்கனவே நாட்டிற்கு உள்ளே வாகனங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டுவிட்டதால் ரேடாரில் அதன்பின் சிக்காது. அதோடு நாட்டிற்கு உள்ளே போன பின்பே தாக்குவதால் ஏவுகணை, டிரோன் தடுப்பு அமைப்புகள் மூலம் இதை தடுக்க முடியாது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ஏஐ மூலம் போர் செய்யும் முறையை உருவாக்கி உள்ளது.
சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படாமல் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது.
ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்கள் உக்ரைன் நடத்தி உள்ளது. இதில் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகியவை ரஷ்யாவின் போர் விமானப்படை தளங்களில் முக்கியமானது ஆகும். இதனால் ரஷ்யாவின் விமானப்படை மிக மோசமான, எதிர்பார்க்காத சேதங்களை சந்தித்து உள்ளது.
300க்கும் மேற்பட்ட டிரோன்களை ஒரே சமயத்தில் அனுப்பி ரஷ்யாவின் விமானப்படையை உக்ரைன் அடித்து நொறுக்கி உள்ளது. இதனால் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது.
இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்து எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications