கவர்ச்சி.. நிர்வாணம்.. ஏகப்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் பிடுங்கிய "ஏஐ".. இதுகிட்ட மட்டும் சிக்கிடாதீங்க!
சென்னை: சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவரிடம் ஆண்கள் பலர் ஏமாந்த சம்பவம் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்கள் பிரபலமான காலத்தில் இருந்தே பேக் ஐடிகளும் பிரபலமாக தொடங்கிவிட்டன. பெண்கள் போல வேஷமிட்டு ஆண்களை ஏமாற்றும் பல ஐடிக்கள் இணையம் முழுக்க உள்ளன.

பேஸ்புக் தொடக்க காலத்தில் ப்ரியா சுவீட்டி, ப்ரியா பியூட்டி போன்ற கணக்குகள் மிகவும் பிரபலமாக இருந்தன. இப்படி இருந்த பல ஐடிக்கள் பெண்கள் வேடத்தில் சுற்றிய ஆண் ஐடிக்கள் ஆகும்.
முக்கியமாக ஆண்களுடன் நெருங்கி பழகுவது, அவர்களை காதலிப்பதாக சொல்லி பணம் கேட்பது என்று பல ஐடிக்கள் சுற்றி வந்தன.
அதன்பின் இன்ஸ்டாகிராம் காலத்திலும் இதேபோல் பல ஐடிக்கள் சுற்றி வர தொடங்கின. இதில் பெரும்பாலும் இஸ்டாவில் இருக்கும் வேறு பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது அல்லது பழைய நடிகைகளின் புகைப்படங்களை பயன்படுத்துவது என்று ஆண்களை ஏமாற்றி வந்தனர்.
ஆனால் இப்போது இணையத்தில் எல்லோரும் பிரபலமாகிவிட்டதால், ஆண்கள் எளிதாக இது போன்ற பேக் ஐடிக்களை கண்டுபிடித்துவிடுகின்றனர். முக்கியமாக வேறு பெண்களின் புகைப்படங்களை வைத்து ஆண்களை ஏமாற்றும் நபர்களை எளிதாக கண்டுபிடித்துவிடுகின்றனர். நீ பயன்படுத்துவது வேறு பெண்ணின் புகைப்படம் என்று கூறி எளிதாக மோசடிக்காரர்களை கண்டுபிடித்து விடுகின்றனர்.
இதையடுத்துதான் தற்போது சில ஆண்கள் ஏஐ பேக் ஐடிக்கள் மூலம் பிற ஆண்களை ஏமாற்ற தொடங்கி உள்ளனர். அதன்படி ரெட்டிட் பயனாளிகள் இரண்டு பேர் சேர்ந்து கிளவுடியா என்று பெண் ஐடியை உருவாக்கி உள்ளனர்.
இரண்டு ஆண்கள் சேர்ந்து பெண்ணின் பெயரில் அந்த கணக்கை தொடங்கி உள்ளனர். அதோடு அந்த கணக்கில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கவர்ச்சியான பெண்ணின் போட்டோவை வைத்து உள்ளனர். அந்த பெண் உலகில் இல்லவே இல்லை.
அவரின் போன்ற முகம் கொண்டவரும் இல்லை. இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண்ணின் முகம். இதனால் கிளவுடியாவுடன் பேசும் ஆண்களால் அதை பேக் ஐடி என்று கண்டுபிடிக்க.முடியவில்லை இணையத்தில் இருந்து பெண்ணின் போட்டோவை எடுத்து ப்ரொபைல் போட்டோவாக வைத்து இருந்தால் எளிதாக கண்டுபிடித்து இருக்க முடியும்.
ஆனால் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதால் அதை ஆண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களும் புகைப்படம் கேட்க கேட்க ஏஐ மூலம் இவர்களும் கவர்ச்சியான புகைப்படங்களை உருவாக்கி அனுப்பி உள்ளனர். அதோடு நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பி உள்ளனர்.
இதில் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி குறிப்பிட்ட தொகையை வசூலும் செய்து உள்ளனர். இதன் மூலம் அவர்கள் பல லட்சங்களை சம்பாதித்து உள்ளனர். கடைசியில் தாங்கள் செய்தது ஒரு சோஷியல் சோதனை.. ஆண்கள் ஏஐ புகைப்படத்திற்கு விழுகிறார்களா என்று பார்த்தோம் என்று கூறி அந்த பணத்தை திருப்பி கொடுத்து உள்ளனர்.
இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து இதை சோதனை முயற்சியாக செய்து பார்த்து உள்ளனர். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கவர்ச்சி படம், நிர்வாண படங்களை வைத்து இந்த மோசடியை அவர்கள் செய்து உள்ளனர்.
Stable Diffusion எனப்படும் ஏஐ மூலம் தத்ரூபமாக இருக்கும் ஏஐகளை அவர்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications