அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அறிவித்துள்ள 150 பேர் கொண்ட இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் சேர்த்து ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் நெல்லை மாவட்ட ஐடி விங் செயலாளர் சையது சுல்தான் சம்சுதீனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான நட்சத்திர வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சூழலில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

AIADMK

சென்னையில் 12 தொகுதிகள் உட்பட இன்னும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். மொத்தமாக 46 சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 17 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 150 பேரில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பாளையங்கோட்டை தொகுதியில் நெல்லை மாவட்ட ஐடி விங் செயலாளர் சையது சுல்தான் சம்சுதீனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக பக்கம் ஐயூஎம்எல், மமக, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அத்தனை இஸ்லாமிய கட்சிகளும் அணி வகுத்து நிற்கின்றன. அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில் அதிமுக எடுத்த சார்பு நிலை பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதால், இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்ற பேச்சுகள் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. அதற்கேற்ப அதிமுகவில் இடம்பெற்ற இஸ்லாமிய நிர்வாகிகளான அன்வர் ராஜா, நிலோஃபர் கஃபீல் உள்ளிட்டோரும் திமுக பக்கம் வந்துவிட்டனர். இப்படியான சூழலில் அதிமுகவில் ஒரேயொரு இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை சிறுபான்மை மக்களின் வாக்குகள் இருக்கும் நிலையில், அதிமுகவில் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலாவது எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+