சென்னையில் நடுரோட்டில் மாணவி முடியை பிடித்து தாக்கிய அதிமுக பிரமுகர்! வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்கச் சொல்லி மிரட்டி, முடியைப் பிடித்து தாக்கிய அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்குதல் நடத்தி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சூர்யா மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவியை நடுரோட்டில் தாக்கியதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அதிமுக இளைஞர் பாசறை 118வது வட்டச் செயலாளர் சூர்யாவை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தப்பி ஓடினார். இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரையும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மது விற்ற வழக்கில் கைதான சூர்யா (18) ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தனது மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் மாமூல் வசூல், இலவச பிரியாணி கேட்டு மிரட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications