"சட்டசபையில் தனி மனித துதி பாடல்.. உங்க பெருமையை பேசுவதற்காகவா சட்டமன்றம்?” பிரேமலதா காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சட்டப்பேரவையில் ஒரு கட்சியை பற்றி துதி பாடுகிறார்கள், தலைவரைப் பற்றி துதி பாடுகிறார்கள். உங்கள் பெருமையை பேசுவதற்காகவா சட்டமன்றம்? பேச வேண்டிய விவகாரம் குறித்து பேசாமல் பேரவை திசை மாறி பயணிக்கிறது." என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Premalatha vijayakanth

அதன் பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தவெக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றி மாற்றி கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தில் நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசியபோது, உறுப்பினர்களின் பேச்சு என்பது தொடர்ந்து நீடித்து கொண்டே போகிறது. உறுப்பினர்கள் உரையில் தனிக் கட்சியை பற்றியும், தனித் தலைவர்களை பற்றியும் துதிப் பாடல்கள் தான் அதிகமாக இருக்கின்றன.

சட்டப்பேரவைத் தலைவர் கூட, "இது ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதைப் பற்றி மட்டும் பேசுங்கள்" என பல முறை கூறியும், தனிமனித துதிப் பாடல்களும், தனிக்கட்சி துதிப் பாடல்களும் தான் பேசப்படுகின்றன. இது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.

எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல் திசை திரும்பி வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கின்றனர். அது எப்போது முடியும் என்பதும் கூட தெரியவில்லை. தலைவர்கள் துதி பாடல் பற்றி பேசினால், நாங்கள் கூட எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.

தமிழகத்தில் சாதி, மத, இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும், அவரவர் தலைவர்களின் பெருமைகளை பேசுவதற்காக சட்டப்பேரவையை பயன்படுத்தினால் அது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்காது. சட்டப்பேரவையை பொறுத்தவரை ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும்.

அதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று கூறினர். ஆனால், பாதியிலேயே துண்டித்து விட்டதாக தெரிகிறது. பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். அதில் என்ன தவறு? சட்டப்பேரவையே மக்கள் வரிப்பணத்தில் தானே நடக்கிறது. இது தொடர்பாக பேரவைத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+