பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை?
சென்னை: திமுக கூட்டணியில் சென்னை மற்றும் கோவையில் பாஜகவிற்கு தலா ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

பாஜக வேட்பாளர்கள்
கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அண்ணாமலை, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிகிறது.
கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். சென்னையில் கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவிற்கு இந்த முறை மயிலாப்பூர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்குகிறார்.
வேட்பாளர்கள் பட்டியல்
அவினாசி தனி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மொடக்குறிச்சியில் சிட்டிங் எம்.எல்.ஏவான சரஸ்வதியின் உறவினரான காயத்ரி அல்லது கிருத்திகா சிவகுமார், திருப்பூர் தெற்கில் ஏ.பி.முருகானந்தம், தளி தொகுதியில் பாஜக மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக வேட்பாளர்கள் - உத்தேச பட்டியல்
அமர்பிரசாத் ரெட்டி - தளி
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார் அல்லது காயத்ரி
எல். முருகன் - அவிநாசி
ஏ.பி. முருகானந்தம் - திருப்பூர் தெற்கு
நயினார் நாகேந்திரன் - சாத்தூர்
கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்
பொன் ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்
எட்வின் ஜோஸ் - பெத்மநாபபுரம்
சிவக்குமார் - குளச்சல்
விஜயதாரணி - விளவங்கோடு
அஸ்வத்தாமன் - திருவண்ணாமலை
கருப்பு முருகானந்தம் - தஞ்சாவூர்
ராமச்சந்திரன் - புதுக்கோட்டை
ஆனந்தன் அய்யாசாமி - வாசுதேவநல்லூர்
ஜி.பி.எஸ். நாகேந்திரன் - ராமநாதபுரம்
பிரேம் குமார் - ராசிபுரம்
தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்
அஸ்வின் - ஆவடி
வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் வடக்கு
போஜ ராஜன் - உதகமண்டலம்
புரட்சி கவிதாசன் - கந்தர்வகோட்டை
சோழன் சி.த. பழனிச்சாமி - திருப்பத்தூர்
கவிதா ஸ்ரீகாந்த் - அறந்தாங்கி
ராம சீனிவாசன் - மதுரை தெற்கு
பாலகிருஷ்ணன் - ராதாபுரம்
பண்ணைவயல் இளங்கோ - திருவாரூர்
பொன் பாலகணபதி - மானாமதுரை
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications