பாஜகவிற்கு வெறும் 5 தான்.. அதிமுக கூட்டணியால் அதிர்ச்சியில் பாஜகவினர்!
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 8 தொகுதியில் பாஜக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 5 தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளது. இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் பாமக - அதிமுக - பாஜக கூட்டணி இறுதியாகி உள்ளது.
பாமக - அதிமுக ஒப்பந்தம் இன்றுதான் கையெழுத்தானது. அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது.
பாமக விவரங்கள்
பாமக அதிமுக கூட்டணியில், அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகாவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக கூறியுள்ளது.மேலும் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் இதில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அறிவிப்பு வெளியானது
அதன்படி லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 5 தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போதுதான் வெளியானது. முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
பாமக - பாஜக
பாமக 7 தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் 5ல் பாஜக போட்டியிட உள்ளது. பாமகவை விட பெரிய தேசிய கட்சியான பாஜகவிற்கு குறைவான இடங்களே அதிமுக கூட்டணியில் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக குறைந்தது 8 தொகுதிகளாவது பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக அதிர்ச்சி
இது பாஜகவினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது. முக்கிய வேட்பாளர்கள் பாஜகவில் நிறைய பேர் இருக்கும் நிலையில் வெறும் 5 தொகுதிகள்தானா என்று பாஜகவினர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீதம் என்ன
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக 8 இடங்களை கேட்டு இருக்கிறது. இதனால் பாஜகவிற்கு அளிக்கும் இடங்கள் போக கடைசியில் அதிமுக 19-20 இடங்களில் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.