Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலையை தாண்டி மலருதா தாமரை? அதிமுக கூட்டணி 3 இடம் பிடிக்கும் தொகுதிகள்.. தந்தி டிவி கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணி, ராமநாதபுரம், மத்திய சென்னை, கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்பட 10 தொகுதிகளில் 3வது இடத்தை தான் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

AIADMK alliance has a chance of winning 3rd position in 10 constituencies in tamilnadu Thanthi tv

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.

தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

அதேநேரம் தந்திடிவி வெளியிட்ட கணிப்பின் படி, அதிமுக கூட்டணியை சில தொகுதிகளில் 3வது இடத்தைத்தான் பிடிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் பாஜக கூட்டணி, அதிமுகவைவிட அதிக வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தருமபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி 3வது இடத்தையே பிடிக்கும் என்று தந்திடிவி தனது கணிப்பில் கூறியுள்ளது.

ராமநாதபுரத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 34 முதல் 40 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணி வேட்பாளருமான ஓ பன்னீர் செல்வம் 30 முதல் 36 சதவீத ஓட்டுகளை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக வேட்பாளர் 20 ச முதல் 26 சதவீத ஓட்டுகளையம், நாம் தமிழர் வேட்பாளர் 6 முதல் 9 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 1 முதல் 3 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் பசலியன் நசரேத் 16 முதல் 22 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் 8 முதல் 11 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.

திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசுக்கு 34 முத்ல 40 சதவீத ஓட்டுகளும், பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு 33 முதல் 39 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது வெறும் 1 சதவீதம் தான் ஆகும்.. அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 17 முதல் 23 சதவீத வரையிலான ஓட்டுகளை பெறுவார் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் சத்யா 5 முதல் 8 சதவீத ஓட்டுகளுடன் 4ம் இடத்தை பிடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 32% - 38% வாக்குகள் பெறுவார் என்றும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 28% - 34% வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 25% - 31% வாக்குகள் பெறுவார் என்றும், தேனி நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலன் 5% - 8% வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+