அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!
சென்னை: அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமகவுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரனுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அது போல் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம், தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு என்பது இழுபறியாகவே இருந்தது. பாஜக 40 தொகுதிகளை கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுகவோ 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க இயலாது என கூறிவிட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அது போல் நேற்று முன் தினம் டிடிவி தினகரனும், அன்புமணியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்பட்டது. அதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்துள்ளார்.
அவர் இந்த கூட்டணி அமைந்தவுடன் முதல்முறையாக எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சியை விட ஒரு தொகுதி குறைவுதான்.
அது போல் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அப்படிப் பார்த்தால் 234 தொகுதிகளில் 56 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 178 தொகுதிகளில் 8 முதல் 10 தொகுதிகள் புதிய நீதி கட்சி, தமாகா, தமமுக, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று சொல்லப்படும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் வெறும் 4 இடங்களில் பாஜக வென்றது. அது போல் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஏற்கெனவே 1 மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டுவிட்டதால் பாமகவுக்கு இந்த முறை குறைந்த தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது பாஜகவுக்கு 7 கூடுதல், பாமகவுக்கு 5 குறைச்சல்! இப்படிதான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications