Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்புகள் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாததால் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வருகிறது.

குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதி எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Tamil Nadu Assembly Election 2026 AIADMK Edappadi Palaniswami

அதிமுக பாஜக கூட்டணி

அந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் வகிக்கும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் தாமதமாகி வருகின்றன.

தொகுதி பங்கீடு

பாஜக கூடுதல் தொகுதிகள் கோரி வருவதாகவும், அதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது என்றும் கூறப்படுகிறது. பாஜக உடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்ட பின்னரே மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்ய முடியும் என்ற நிலைமை அதிமுக தரப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்களது கட்சி விரும்பும் 30 தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாததால் பாமக கேட்கும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பாமக 30 தொகுதி

மேலும் ஏற்கனவே பாமக எம்.எல்.ஏ.க்கள் உள்ள மேட்டூர் மற்றும் மயிலம் ஆகிய தொகுதிகளை அதிமுக கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாமக தரப்பில் சில எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தங்களது செல்வாக்கு உள்ள பகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை

பாஜக உடனான தொகுதி பங்கீடு விவகாரம் ஏற்கனவே நீண்டுகொண்டிருக்கும் நிலையில், பாமக கேட்கும் தொகுதிகளை அதிமுக வழங்குமா என்பது பற்றியும் சந்தேகம் நிலவுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் நீண்டு கொண்டே செல்கின்றன. இதற்கிடையில் மறுபுறம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விரைவாக முன்னேறி வருகின்றன. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி

குறிப்பாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாததால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், தொகுதி பங்கீடு இழுபறி நீடிப்பது அந்த பணிகளை மறைமுகமாக பாதிக்க க்கூடும் என்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+