"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்!
திமுக, அதிமுக தரப்பில் ரகசிய சர்வே ஒன்று எடுக்கப்பட்டதாம்
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் தமிழக அரசியலில் ஓடிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்றாலும் அதிமுக, திமுக தரப்பினருக்கு தெம்பை தந்து வருகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக, அதிமுக என இருவருக்குமே முக்கியமான தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும் கடுமையாக போராடி வருகின்றன.

இதற்கு நடுவில் சீமான், கமல், டிடிவி தினகரன் ஒருபக்கம் களமிறங்க இவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு விடுமோ என்ற கலக்கம் இருந்துள்ளது.. அதாவது சீமான் திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பார் என்றும், கமல், அதிமுகவின் ஓட்டுக்களை பிரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது..
ஒருவேளை இவர்கள் 3 பேரும் இணைந்தால், திமுக, அதிமுக ஓட்டுக்கள் கணிசமாக பிரிந்து, கூட்டணி வாக்கு சதவீதத்தை குறைத்துவிடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த சமயத்தில்தான், ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பின்வாங்கி விட்டார்.. எனவே, திமுக, அதிமுகவும், தனித்தனியாக ஒரு சைலண்ட் சர்வே எடுத்து பார்த்தார்களாம். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஒரு ரகசிய சர்வேயை, தங்களுக்கு ஆலோசனை தந்து கொண்டிருக்கும் 2 தனியார் நிறுவனங்களையும் வைத்து, தமிழகம் முழுக்க தனித்தனியாக எடுக்க சொல்லி உள்ளனர். அதில், ரஜினி கட்சி துவங்காதது, மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான், இருந்தாலும், பொதுமக்கள், தங்கள் ஓட்டுக்களை மெகா கட்சிகளான திமுக, அதிமுகவுக்குதான் அளிக்ககூடும், இதில் ஒரு கட்சியைதான் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகளுக்கு ரஜினியின் அந்த வாக்குகள் செல்லாது என்றும் தெரியவந்துள்ளது.
இப்படி ஒரு ரிசல்ட்டை கேள்விப்பட்டதும் இரு திராவிட கட்சி தலைமைகளும் செம குஷியாகி விட்டதாம். ஆக, ஒன்னு நீ இருக்கணும், இல்லாட்டி நான் இருக்கணும், வேற யாரும் 3வதாக வந்துவிடக்கூடாது என்பதே இந்த சைலண்ட் சர்வேயின் சூட்சுமம் போலும்!
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!











Click it and Unblock the Notifications